ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அமுதா சொன்னதே கேட்டு அதிர்ந்த ஆதவிக்கும் அன்வியும் அவரை பார்க்க...
ஏன் ரெண்டு பேரும் என்னை அப்படி பாக்கறீங்க நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் மனசுக்குள்ள போட்டு வச்சு எல்லாத்தையும் மறைச்சு வச்சுக்குவீங்களா எங்களால அது முடியாதா? என்று அமுதா அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டார்.
அப்போது வாசன் அமுதாவின் அருகில் வந்து அவர் தோளில் கை வைத்து அழுத்தம் கொடுத்து அவரை சமாதானப்படுத்த முயன்றவர் ஆத்விக்கிடம் திரும்பி இந்த விஷயம் எல்லாம் எனக்கு நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சம்மதம் சொல்றதுக்கு முன்னாடியே தெரியும் என்றார் வாசன் .
அவர் சொன்னதை கேட்டு அன்வியை விட அதிர்ச்சியானது ஆத்விக் தான் .
தாத்தா என்று தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து அதிர்ச்சியாக ஆத்விக் எழுந்திருக்க...
அவன் கையைப் பிடித்துக் கொண்ட வாசன் ஆமா ஆத்விக் நீ ரெஸ்டாரண்டில் வந்து அன்வியை முதல் முறை பார்த்துட்டு போன பிறகு அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குன்னு அவ பார்வையை வச்சு நான் கண்டுபிடிச்சிட்டேன்.
அதுவும் இல்லாம நீ என்கிட்ட நடந்துக்கிட்டதையும் வைத்து எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சு போயிடுச்சு.
உன்ன பத்தி விசாரிச்சு எப்படியாவது உன்னை என் பேத்திக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும்னு என்னோட ஆளுங்ககிட்ட சொல்லி உன்ன பற்றி விசாரிக்க சொல்லி இருந்தேன்.
உன்னைப் பற்றிய தகவல் எல்லாம் எனக்கு வந்த போது உன்னுடைய அப்பா தான் என் மகனையும் மருமகளையும் லாரி ஏத்தி கொன்னதுன்னு எனக்கு அப்போவே தெரியும்.
அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது உண்மையில் உன் குடும்பத்தின் மீதும் மிகவும் கோபமாக தான் இருந்தது எனக்கு.
அதே கோபத்தோடு தான் நீ இல்லாத போது ஒரு முறை நான் உன் வீட்டிற்கு வந்து உன் அம்மாவை பார்க்க சென்றேன்.
அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது உன் அப்பா செய்த காரியத்திற்காக இந்த உலகத்தின் முன்பு அவர் இறந்துவிட்டதாக அனைவரிடமும் பொய்யே சொல்லி அவரை தன் குடும்பத்திலிருந்து மொத்தமாக ஒதுக்கிவிட்டு ஊரார் முன் விதவையாக உன் அம்மா வாழ்ந்து கொண்டு இருப்பதை நான் தெரிந்து கொண்டேன்.
உன் அம்மாவே சந்தித்தபோதுதான் சில விஷயங்களை நானும் உன் அம்மாவும் பேசி தெளிவு படுத்திக் கொண்டோம். அப்போதே எனக்கு புரிந்து விட்டது.
என் மகனும் மருமகளும் இறந்ததற்கு காரணம் கண்டிப்பாக உன் அப்பாவாக இருக்க முடியாது என்று அப்போதுதான் எனக்கு புரிந்தது.
அதுவும் இல்லாமல் உன் அப்பா வேலு என் மகனிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவனைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் அவன் அப்படி செய்யக்கூடிய ஆளும் கிடையாது .
பிறகு தான் அமுதாவும் நானும் பேசி தெளிவு படுத்திக் கொண்டோம் நான் எப்படியாவது என் பேத்தியை கண்டிப்பாக வேலுவின் மகனுக்குத் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன்.
அதன் பிறகு நானும் அமுதாவும் பிளான் செய்து தான் அவரை நான் ஹாஸ்பிடலில் கடத்தி வைத்து என் பேத்தியின் கழுத்தில் தாலி கட்ட உன்னை பிளாக்மெயில் செய்தது என்றார் வாசன் .
அவர் சொன்னது எல்லாம் கேட்டு இவ்வளவு நேரம் தன் மனதில் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவனாக தாத்தா என்று வாசனை கட்டிக்கொண்டு ஆத்விக் அழ ஆரம்பித்தான்.
ஆத்விக் வாசனைக் கட்டிக்கொண்டு கொண்டு தாத்தா என் அப்பாதான் அன்வியின் அம்மா அப்பாவை கொன்னு இருக்காருன்னு தெரிஞ்சும் நீங்க எப்படி உங்க பேத்தியை எனக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு பண்ணுணிங்க என்றான்.
ஆத்விக் உன் அப்பா தான் என் மகனையும் மருமகளையும் கொலை செய்தாங்கன்னு எந்த ஆதாரமும் இப்போ வரை எனக்கு கடைக்கல.
எனக்கு வேலுவை பற்றி நல்லா தெரியும் அவன் இந்த மாதிரி ஒரு காரியத்தை தெரியாம கூட செஞ்சு இருக்க மாட்டான்.
அப்படியே அவன் செய்து இருந்தாலும் கண்டிப்பா அது அவனாக செய்ததா இருக்காது.
யாரோ ஒருத்தர் எதுக்காகவே இல்லை யாருக்காகவோ அவனை மிரட்டி இந்த காரியத்தை செய்ய தூண்டி இருக்கனும் என்றார் வாசன் .
இருந்தும் தாத்தா அந்த லெட்டர் போட்டோ என்று ஆத்விக் கூற...
அவனை தன்னிடம் இருந்து பிரித்து நிற்க வைத்த வாசன் அவன் கன்னத்தை வருடி உண்மையாகவே உன் அப்பத்தான் என் மகனை கொலை செய்து இருந்தாள் கூட அப்பவும் நான் உன்னைத்தான் என் பேத்திக்கு கல்யாணம் செய்து வெச்சு இருப்பேன்.
உன்னுடைய மனசு, உன்னோட குணம் இது எல்லாம் பிடிச்சுதான் நான் என் பேத்திக்கு உன்னை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேனே ஒழிய உன்னுடைய குடும்பம் வசதி இது எல்லாம் எதையும் பார்த்து நான் செய்யலை என்றார்.
அவரின் பெருந்தன்மையான மனம் ஆத்விக் மட்டும் அல்ல அமுதா, நிலாவை கூட நெகில செய்தது.
அமுதா அப்பா என்று சொல்லி வாசனின் கைகளை பிடித்துக்கொள்ள..
நிலா அழுத விழிகளோடு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு நின்று இருந்தாள்
அவளை இழுத்து தன் கைக்குள் நிற்க வைத்த அன்வி அவள் கண்களை துடைத்து விட்டு அழாதே என்று நிலாவிற்கு ஆறுதல் கூறினால் .
அவளை நிமிர்ந்து பார்த்த நிலா அண்ணி என்று ஏதோ சொல்ல வர...
ஷ்... என்று அவள் வாயில் விரல் வைத்து எதுவும் பேசாதே என்றாள் அன்வி .
நிலா உணர்ச்சி பெருக்கில் அன்வியை கட்டிக் கொள்ள... அவள் அருகில் நின்று இருந்த யமுனாவும் வந்து நிலாவை கட்டிக்கோ கொள்ள...சொல்ல முடியாத உணர்ச்சிகளோடு நிலா அழுத்துக்கொண்டு இருந்தாள்.
ஒரு பக்கம் நிலாவையும் மாறு பக்கம் யமுனாவையும் கட்டிக் கொண்டு நின்று இருக்க முதல் முறையாக ஒரு தாயின் அன்பை வெளிப்படுத்தும் தன் மனைவியை பார்த்த ஆத்விக் தனக்கும் அந்த தாய் அன்பு வேண்டும் என்பது போல உணர்ந்தவன் ஓடிச் சென்று அன்வியை கட்டிக்கோ கொண்டான்.
இந்த காட்சியை பார்த்த சூர்யா தேன்மொழி, சூர்யாவின் அப்பா, வாசன் , அமுதா இவர்கள் எல்லாம் தங்கள் மனதில் எப்படியோ அன்வியை விட்டு பிரியாமல் ஆத்விக் இருந்ததே பெரிய நிம்மதியாக தோன்றிது.
தங்கள் மூவரையும் கட்டிக்கோ கொண்டு ஆத்விக் நின்று இருக்க...
அன்வி தன்னிடம் இருந்து அனைவரையும் பிரித்து விட்டவள் நிலாவையும் யமுனாவையும் பார்த்து சிரித்து விட்டு நிலா யமுனாவை கூட்டிட்டு போய் சாப்பிட வை அவ டேப்ளேட்ஸ் போடணும் இல்ல என்றாள்.
சரி அண்ணி என்ற நிலா, வா டி சாப்பிட போகலாம் என்று யமுனாவை இழுத்துக் கொண்டு செல்ல...
எனக்கும் பசிக்கிறது என்று சூர்யாவும் யமுனாவுடன் ஒட்டிக் கொண்டு சென்றான்.
மற்றவர்கள் எல்லாம் அந்த அறையில் இருக்க...
அன்வி ஆத்விக்கை திரும்பியும் பாராமல் அந்த அறையை விட்டு வெளியே செல்ல...
ஆத்விக் தன்னை தாண்டி சென்றவளை பார்த்து ஏய் அன்வி... என்று அழைக்க...
தாத்தா அவருக்கு தான் நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டானே... நான் டிவெர்ஸ் பேப்பரில் சைன் பண்ண தயாரா இருக்கேன்.
அவனை டிவோர்ஸ் பேப்பரை ரெடி பண்ணி கொண்டு வர சொல்லுங்க நான் சைன் பண்றேன் என்றவள் வெளியே நடக்க...
அவள் சொன்னதை கேட்டு இப்போ அதிர்ச்சியானவன் ஆத்விக். அதே அதிர்ச்சியோடு திரும்பி வாசனை பார்க்க...
ஆத்விக் அவ டிவெர்ஸ் வேணும்னு சும்மா சொல்றா... உண்மைய சொல்லனும்னா அவ உன் மேல பயங்கர கோபமா இருக்கா என்றார் அன்விக்கு கேட்காத வண்ணம்.
அன்வி அந்த அறையை விட்டு தன் அறைக்கு மேலே சென்று கொண்டு இருக்க...
அவள் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் செல்வதை நினைத்து ஆத்விகிற்கு மனம் வலித்தது.
தனக்கு வலித்தது போல தானே அவளிடம் நான் டிவெர்ஸ் வேண்டும் என்று கெட்ட போது வலித்து இருக்கும்.
தன் மீது தானே எல்லா தப்பும் இருக்கிறது.
அவள் தன் மீது கோபமாக இருப்பதில் தவறில்லை என்று ஆதவிக்கிற்கு புரிந்தது.
ஆத்விக் வாசனிடம் தாத்தா நீங்க கொஞ்சம் அவ கிட்டே சொல்லுங்க என்கிட்டே பேச சொல்லி என்று வாசனிடம் உதவி கேட்க..
நான் எதுவும் உங்க விசயத்துல செய்ய முடியாதுப்பா... நீங்க புருஷன் பொண்டாட்டி இன்னிக்கு சண்டை போட்டுக்குவிங்க... நாளைக்கு ஒன்னா சேர்ந்துக்கவீங்க..
உங்க விளையாட்டுக்குள்ள நான் இல்ல... இங்க இருக்க யாருமே வர மாட்டோம் என்றவர் அங்கிருந்து வெளியே சென்றார்.
தனக்கு உதவாமல் அனைவரும் செல்வதை பார்த்த ஆத்விக் .சரி இனி இவங்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை அன்வி கையில காலில் விழுநதாவது அவளை பேச வைத்து விட வேண்டும் என்று மாடிப்பாடி ஏறிக் கொண்டு இருந்த தன் மனைவியை முன்பை விட பல மடங்கு காதலோடு பார்த்தான்.
❤️
ப்ரீத்தி சின்னுவுடன் சேர்ந்து வருணை எறித்துவிட்டு வந்ததில் இருந்து பயந்து போய் இருந்தாள்.அதே பயத்துடனே தன் அறையை விட்டும் வெளியே வரவே இல்லை.
அவளுக்கு என்ன ஆகிற்று என்று தெரியாமலா அவள் அம்மாவும் அப்பாவும் கீர்த்தியை பார்க்க... அவளோ குளிர் ஜுரத்தில் கட்டிலில் போர்வையை போற்றி படுத்து இருந்தாள்.
வெளியே சென்று விட்டு வந்ததில் இருந்து அவள் ரூமை விட்டு வரவே இல்லை, இரவு முழுவதும் அறையிலேயே தான் இருந்தாள்.
அவள் அம்மாதான் வற்புறுத்தி கீர்த்தியை சாப்பிட வைத்தார்.
அன்வியிடம் அழைத்து விஷயத்தை கீர்த்தியின் அப்பா சொல்ல..தான் டாக்டரை வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக சொல்லி போனை வைத்த அன்வி தன் குடும்ப டாக்டருக்கு போன் செய்து கீர்த்தியை சென்று பார்த்து வர சொன்னாள்.
டாக்டரும் வந்து கீர்த்தியை பரிசோதித்து விட்டு இது சாதாரண குளிர் ஜுரம் தான். அவங்க எதையோ பார்த்து பயப்பட்டு இருக்காங்க.
நல்லா தூங்கு எழுந்தா சரியா போய்டும் அவங்க தூங்குறதுக்காக நான் இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன்.
அவங்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டுட்டு டாக்டர் சென்று விட..
கீர்த்திக்கு சாப்பிட கொடுத்துவிட்டு அவள் சாப்பிட்ட பின் போட வேண்டிய மாத்திரைகளையும் கொடுத்து அவளை படுக்க வைத்துவிட்டு. அவள் அம்மாவும் அப்பாவும் அவள் அறைக் கதவை சாற்றிவிட்டு கீர்த்தியை யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று வேலையாட்களிடம் சொல்லிவிட்டு சென்றனர்.
தூங்குவதற்காக ஊசி போட்டதும் மாத்திரைகளை போட்ட பின்பும் கீர்த்திக்கு தூக்கம் வராமல் நேற்றைய நினைவிலேயே உழன்று கொண்டு இருந்தாள்.
தூக்கம் வராமல் சும்மா இருந்தால் தேவையற்ற நினைவுகள் வந்து அலை கழிக்கிறது என்று தன் மொபைலை எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பார்க்க ஆரம்பித்தாள். கொஞ்சம் மருந்தின் வீரியத்தில் அவளுக்கு ஒரு மாதிரி தூக்கம் வருவது போல இருக்க...
போனை வைத்துவிட்டு தூங்கலாம் என்று படுக்க போன கீர்த்தி பால்கனியில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று தள்ளாடியபடியே எழுந்து வந்து கதவை திறக்க போனவள் வெளியே பார்க்க...
அப்போது சரியாக பால்கனி வழியாக மேலே ஏறி சின்னு கீர்த்தியின் வின் பால்கனிக்குள் குதித்தான்.
அவனை பார்த்ததும் இந்த நேரத்தில் இவன் இங்கே என்ன செய்கிறான். அதுவும் பால்கனி வழியாக மேலே என் அறைக்கு வருகிறான் என்று யோசனையோடு கதவை திறக்க வந்தவள் கதவை திறக்காமல் என்னதான் செய்கிறான் இந்த நேரத்தில் என்று பார்க்கலாம் என்று வேகமாக வந்து தன் மெத்தையில் படுத்துக் கொண்டு தூங்குவது போல பாவனை செய்தவள்.
அரைக் கண்ணை திறந்து சின்னு என்ன செய்கிறான் என்று பால்கனி ஜன்னல் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
பால்கனி வழியாக மேலே வந்த சின்னு சாவகாசமாக வந்து கீர்த்தியின் பால்கனி கதவை உள்ளே போடப்பட்டு இருந்த தாள்பாளை தன் கையில் வைத்து இருந்த ஒரு கம்பியைக் கொண்டு கைதேர்ந்த திருடன் போல பால்கனி கதவை திறந்து உள்ளே வர...
அரைக் கண்ணில் பார்த்துக் கொண்டு இருந்த கீர்த்தி அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தவள். ஏய் கீர்த்தி அவசரப்பட்டு கண்ணை முழிச்சு அவன் என்ன செய்றான்னு பார்க்காமயே முடிவு பண்ணாத. இந்த ராஸ்கல் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்றான்னு நீ தெரிஞ்சுக்க வேணாமா? பேசாம அமைதியா இரு என்று யோசித்தவள் .
சட்டென்று முன்பு போலவே பாதி கண்ணை முடியும் மூடாமலும் படுத்துக்க கொண்டாள்.
கதவை பொறுமையாக சாற்றிவிட்டு உள்ளே வந்த சின்னு கீர்த்தி படுத்து இருந்த இடத்திற்கு அருகில் வந்து அருகில் இருந்த ஒரு சேரை இழுத்து போட்டு அதில் அமர்ந்து கொண்டு கீர்த்தியின் கையை எடுத்து தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டான்.
அவன் தன் கையை பிடித்ததும் கீர்த்திக்கு உடல் எங்கும் ஷாக் அடித்தது போல இருந்ததது.
சின்னு வெறுமனே கீர்த்தியின் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருக்க... ஏற்கனவே அரை தூக்கத்தில் இருந்தவள் கண் விழிக்க முடியாமல் மருந்தின் வீரியத்தில் தன்னையும் மறந்து தூங்கி விட்டாள்
ஹலோ பிரெண்ட்ஸ் 🌹
Facebook link
கருத்துகள்
கருத்துரையிடுக