ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
அன்வி நீ ஒன்றும் சின்ன பொண்ணு கிடையாது. இந்த மாதிரி எல்லாம் என்னை பிளாக்மெயில் பண்ணினா நான் எதுக்கும் இறங்கி வர மாட்டேன் நான் என்னோட முடியலை உறுதியா இருக்கேன் தயவு செய்து புரிந்துகொள்.
என்னோட குடும்பம் உன் குடும்பத்துக்கு செய்த துரோகத்தை கேட்டால் நீயே என்னையும் என் குடும்பத்தையும் அடிச்சு வெளியே துரத்திடுவ...
நன்றாக உறவு இருக்கும் போதே மரியாதை நாங்கள் வெளியே செல்வதுதான் சரி என்று சொன்ன அருள் அமுதாவை கைத்தவர்களாக மெத்தையில் இருந்து பிடித்து நிற்க வைத்தவன்.
அருகில் இருந்த சக்கர நாற்காலியில் அவரை அமர வைத்துவிட்டு நிலாவை பார்த்து போலாம் என்று சொல்ல...
அங்கு யாருக்கும் என்ன சொல்வது என்று புரியவே இல்லை.
அன்வி கையில் கத்தி வைத்துக் கொண்டு ஆத்விக்கை மிரட்ட... அவளிடம் நிதர்சனத்தை உரைத்த ஆத்விக் இந்த மாதிரியெல்லாம் சின்ன பிள்ளைத்தனமா பண்ணாத என்று சொல்லிவிட்டு அவரைத் தாண்டி தன் அம்மாவையும் தங்கையும் அழைத்துக் கொண்டு செல்லப் போக...
அவன் முன்னால் நின்று இருந்தவர்கள் எல்லாம் ஆத்விக்கைப் போக வேண்டாம் என்று தடுக்க முயற்சித்தனர்.
அப்போது ஆத்விக்கின் முன்னால் நின்றிருந்த யமுனாவின் முகம் கலவரமாக மாற....
அக்கா!!! என்று பதறிக்கொண்டு அன்வியை நோக்கி ஓடினாள்.
அவள் பதட்டமாக செல்லவதை பார்த்த ஆத்விக் அதே பதற்றத்தோடு திரும்ப...
அங்கே அன்வி மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தாள்.
திடீர் என்று அன்வி மயக்கம் போட்டு கீழே விழவும் பதறிய ஆத்விக் ஓடி வந்து அன்வியை தூக்கி தன் அம்மாவின் படுக்கையில் படுக்க வைத்தவன் அன்வியின் நாடியை பிடித்து பார்த்தான்.
ஆத்விக்கிற்கு முதலில் எதுவும் பிடி படவில்லை. பிறகு நர்சிடம் ஸ்டேதஸ் கோப்பை கொண்டு வரச் சொல்லி அன்வியை பரிசோதித்து பார்த்ததன் அவள் இரண்டு மூன்று நாட்களாக சரியாக சாப்பிடாமல் தூங்காமல் அலைந்தது தான் இப்போது மயக்கம் போட்டதற்கு காரணம் என்று உணர்ந்தவன்.
நர்சிடம் சொல்லி அன்விக்கு தேவையான மருந்துகளை எடுத்து வரச் சொன்னவன் தானே முன் நின்று அவளுக்கு டிரிப்ஸ் மாட்டிவிட்டு அன்விக்கு அதில் மருந்து செலுத்தி அவள் சீக்கிரமே கண்விழிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டான்.
அன்வி மயங்கி சரிந்ததில் இருந்து அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவளுக்கு சிகிச்சை பார்த்தது வரை ஆத்விக் அத்தனை அத்தனை அக்கறையோடு செய்து கொண்டு இருந்தான்
இதை எல்லாம் அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு இவனால் எப்படி அன்வியை விட்டு பிரிந்து இருக்க முடியும்.
டைவர்ஸ் வாங்கி விட்டு செல்கிறேன் என்று எப்படி சொல்கிறான் என புரியாமல் ஆத்விக்கை பார்த்தனர்.
அன்வி சிகிச்சைக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டு அவள் பக்கத்திலேயே அமர்ந்து அவள் கைகளை பிடித்தபடி யோசனையோடு அமர்ந்து இருந்தான் ஆத்விக் .
சிறிது நேரத்தில் அன்வியும் மயக்கம் தெளிந்து லேசாக அவள் முகம் சுருங்கிக் கொண்டே கண்களை திறக்க அதை பார்த்து ஆத்விக்கிற்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
அவள் கண்களை நன்றாக திறக்க திறந்து கண்களில் கண்ணீர் வழிய தன் அருகில் அமர்ந்திருந்த ஆத்விக்கை பார்க்க....
அவள் கண் விழித்து விட்டால் என்பதை உறுதி செய்த பிறகு அவளை பிடித்திருந்த தன் கையை விடுவித்தவன்.
அவன் அம்மாவையும் நிலாவையும் பார்த்து வாங்க போகலாம் என்று சொல்லிவிட்டு சாரியிலிருந்து எழுந்திருக்க போக...
அவனை எழுந்திருக்க விடாமல் அன்வி அவன் கையை கெட்டியாக பிடித்து இருந்தாள் .
இயலாமையோடு ஆத்விக் திரும்பி அன்வியை பார்க்க...
அவள் வழிந்த கண்ணீரோடு அவனை போக வேண்டாம் என்று தலையை இடவலமாக ஆட்டி கெஞ்சினாள்.
அவள் கண்களில் கண்ணீர் தன்னால்தான் வருகிறது என்பதை உணர்ந்த ஆத்விக் . அவள் கண்களில் வலிந்த கண்ணீரைத் துடைக்க எழுந்த தன் கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
அவன் கையைப் பிடித்தவரை மெல்ல எழுந்து அன்வி படுக்கையில் அமர...
அவள் எழுவதை பார்த்ததும் ஆத்விக் அவசரமாக சேரில் இருந்து எழுந்தவன். இப்ப எதுக்கு அன்வி எழுந்திரிக்கிற இப்போ தானே மயக்கம் போட்டு விழுந்திருக்க உடம்புல கொஞ்சம் கூட சக்தியே இல்ல நீ இப்படி எழுந்திரிக்காத கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு என்று அருள் பதட்டப்பட...
அவன் கைகள் இரண்டையும் இருக்க கட்டிக்கொண்ட அன்வி இவ்வளவு அக்கறை உனக்கு என் மேல இருக்கும்போது எப்படி என்னை வேண்டாம் என்று சொல்லிட்டு டைவர்ஸ் வேணும்னு கேட்டு இங்கிருந்து விட்டு விட்டு வெளியே போக அவசரப்பட்ற.
நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறேன் எனக்கு தெரியாது என்று நினைத்துவிட்டாயா ஆத்விக் என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து.
ஆத்விக் அன்வி சொன்னதை கேட்டு புரியாமல் அவளை பார்க்க...
கட்டிலில் அமர்ந்திருந்த அன்வி வாசனிடம் திரும்பி தாத்தா எங்க கல்யாணத்தப்போ ஒரு சின்ன பையன் வந்து மண்டபத்துல என்னோட ரூம்ல ஒரு கவர் கொண்டு வந்து கொடுத்தானே, அது ஞாபகம் இருக்கா என்றாள் அன்வி .
அவள் கவரை பற்றி பேசியதும் வாசனின் முகம் மாறியது. அது அந்தக் கவரா அந்த கவர் எதுக்கு அன்வி இப்போ என்று அவர் பதற்றமாக கேட்டார்.
அவர் கவரைப் பற்றி பேசியதும் பதட்டமாவது கவனித்த ஆத்விக் ஏன் இவர் இப்படி பதட்டப்படுகிறார் அப்படி அந்த கவரில் என்ன இருக்கிறது என்று யோசனையோடு அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆமா தாத்தா அதே கவர் தான் இங்கு திருமணத்தப்போ எங்களுக்கு பரிசு கொடுத்த அந்த கவர் தான் கேட்கிறேன் என்றால் அன்வி அழுத்தமாக.
அது அது அந்த கவர்ல ஒன்னும் இல்லம்மா வெறும் பணம் மட்டும் தான் வந்து இருந்துச்சு அதை எடுத்து வச்சுட்டேன் அதை கவர்ச்சி போட்டுட்டேன் என்றார் வாசன் .
ஏன் தாத்தா பொய் சொல்றீங்க அந்த கவர அப்படியே உங்ககிட்ட இருக்கு எனக்கு தெரியும் நீங்க அதை எதுவுமே பண்ணல தவிர அந்த கவர் குள்ள பணம் இல்லை ஒரு லெட்டர் சில போட்டோக்கள் தான் இருந்துச்சு எனக்கு தெரியும் என்றால் அன்வி .
அவள் அந்த கவரில் இருந்த லெட்டரை பத்திய விபரங்கள் சொன்னதும் முதலில் அதிர்ச்சி அடைந்த வாசன் அன்வியை பார்க்க...
என்ன தாத்தா பாக்குறீங்க அந்த கவர பத்தி விஷயம் எனக்கு எப்படி தெரியும்னு தானே பாக்குறீங்க எங்களோட ரிசப்ஷன் எப்போ ஒரு சின்ன பையன் எங்களுக்கு கவர் கொண்டு வந்து கொடுக்க வந்தான் அவன் கையில இருந்த கவரை நீங்க பார்த்ததும் அவன்கிட்ட வேற ஒரு கவர்ல பணத்தை வைத்து அதை கொடுத்து என்கிட்ட கொடுக்க சொல்லிட்டு அவன் கொண்டு வந்த கவர நீங்க வாங்கிட்டு போனத நான் என்னோட அறையில் இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்.
நீங்க அந்த கவர கொண்டு போய் உங்க கார்ட்ஸ் கிட்ட கொடுத்து காரில் வைக்க சொல்லி இருந்தீங்க.
அந்த இடத்தை விட்டு நீங்க போனதும் நான் என்னோட கார்ட்ஸ அனுப்பி உங்க காட்சிக்கும் உங்களுக்கும் தெரியாம அந்த காரில் இருந்த கவர்ல என்ன இருக்குன்னு எனக்கு தெரியப்படுத்த சொல்லி இருந்தேன்.
நான் வீட்டுக்கு போறதுக்குள்ள என்னோட கார்ட்ஸ் அந்த காரில் இருந்த கவர் அந்த போட்டோஸ் எல்லாம் அவங்க போன் மூலமா தெளிவா போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப் பண்ணிட்டாங்க.
என்னோட ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போறதுக்கு முன்னாடியே அந்த கவர்ல இருந்த விஷயங்கள் எல்லாமே என்னன்னு படிச்சு பார்த்துட்டு தான் நான் போனேன் என்றால் அன்வி .
அன்வி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான வாசன் அப்போ உனக்கு முன்னாடியே அந்த கவர்ல இருந்த விஷயம் எல்லாம் தெரிந்து விட்டதாக அன்வி என்றார்.
அன்வி ஆமாம் என்று தலையாட்ட...
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை பார்த்த அருளுக்கு தனக்கு தெரிந்த விஷயம் இவர்களுக்கு ஒண்ணுமே தெரிந்திருக்கிறது போல என்று புரியாமல் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
தன் பேத்திக்கு அதிலிருந்து விஷயங்கள் எல்லாம் முன்பே தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தவர் வேறு வழி இல்லாமலும்
அதற்கு மேல் அவளிடம் மறைக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட வாசன் ஒரு நிமிஷம் இருமா... என்று சொல்லிவிட்டு தன்னரைக்குச் சென்றவர் அந்த கவர்ரோடு திரும்பி அன்வியிடம் வந்தார் .
அவர் கையில் இருந்த கவரை ஆத்விக் பார்க்க அவனைத் தாண்டி கொண்டு போய் அதை அன்வியின் கையில் கொடுத்தார் வாசன் .
அந்தக் கவரை வாங்கிய அன்வி அதை அப்படியே ஆதவிக்கிடம் கொடுத்து இதில் என்ன இருக்குன்னு நீயே பிரிச்சு பாரு என்றால்.
ஆத்விக் அந்த கவரை வாங்கி அதில் என்ன இருக்கிறது என்று யோசனையோடு அமர்ந்து இருக்க.
என்ன ஆத்விக் இந்த கவர் குள்ள என்ன இருக்குன்னு யோசிச்சிட்டு இருக்கியா என்றால் அன்வி .
ஆத்விக் ஆமாம் என்று தலையை ஆட்ட...
நீ எந்த காரணத்துக்காக இந்த விட்டு இந்த வீட்டை விட்டு போறேன்னு சொன்னியோ.....
நீ எந்த காரணத்துக்காக அத்தையையும் நிலாவையும் இங்கிருந்து அழைச்சிட்டு போக இருந்தியோ.
நீ எந்த காரணத்துக்காக என்ன வேண்டாம்னு சொல்லிட்டு இங்கிருந்து போக துணிஞ்ஜியோ.
நீ எந்த காரணத்துக்காக என்ன டைவர்ஸ் பண்ணனும்னு நினைச்சியோ அந்த காரணம் தான் அந்த கவர் குள்ள இருக்கு என்றால் அன்வி .
அன்வி சொல்வதை கேட்ட ஆத்விக் அதிர்ச்சியோடு அவள் முகத்தை பார்க்க....
அந்தக் கவர பிரி ஆத்விக் என்று அவனை அழுத்தமாக பார்த்து கூறினால் அன்வி .
அவளுக்கு ஏற்கனவே விஷயம் எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்த ஆதவிக்கின் கைகள் நடுங்க ஆரம்பித்தது.
அவன் கைகள் நடுங்க அந்த கவருக்குள் இருந்த லெட்டரை வெளியே எடுக்க அதனோடு சேர்த்து சில போட்டோக்களும் கீழே விழுந்தது.
ஆத்விக் பதட்டத்தில் தரையில் இருந்த போட்டோவை எடுக்க குனிய அதற்குள்ளாக அவன் அருகில் வந்த நிலா அந்த போட்டோக்களை எடுத்து அவனிடம் கொடுக்கப் போனவள் அதிலிருந்து நபரை பார்த்ததும் அப்படியே நின்றாள்.
அந்த போட்டோவில் ஆத்விக் தன் குடும்பத்தோடு சிறுவயதில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது.
அதைப் பார்த்த நிலா அண்ணா என்று அவனிடம் நீட்ட... அதே நடுங்கும் கைகளோடு நிலாவிடமிருந்து அந்த போட்டோவை வாங்கி பார்த்தவனுக்கு அப்படியே அதிர்ச்சியாகி போனது.
தான் நேற்று நிலாவிடமிருந்த தன்னுடைய குடும்ப ஆல்பத்தில் இருந்து எடுத்து வைத்துக் கொண்ட தன்னுடைய போட்டோவை தான் இப்போது அன்வி கொடுத்த கவரில் இருந்து ஆத்விக் எடுத்திருக்கிறான்.
அந்த போட்டோவை பார்த்துவிட்டு அன்வியை திரும்பி பார்க்க என்ன பார்க்கிற உன் கையில் இருக்கிற லெட்டரை பிரிச்சு படிச்சு பார் என்றால் .
இப்போது முன்பை விட ஆதவிக்கிற்கு மிகவும் பதட்டமாக போய்விட்டது. பேமிலி போட்டோவை அவனிடம் காட்டி இருக்க அவளுக்கு தங்களைப் பற்றிய ஏதோ விஷயங்கள் தெரிந்திருக்கிறது என்று யோசனையோடு அந்த லெட்டரை பிரித்து படிக்க ஆரம்பித்தான்.
அந்த லெட்டரில் யாரோ முன் பின் தெரியாதவர்கள் எழுதியது போல எழுதப்பட்டு இருந்தது அதை பார்த்ததுமே அது மொட்டை கடுதாசி என்பதை புரிந்து கொண்டான் ஆத்விக்
தன் கையில் இருந்து அந்த லெட்டரை படிக்க ஆரம்பித்தான் ஆத்விக் .
எடுத்ததுமே அந்த லெட்டரில் இப்படி இப்படி உன் அப்பாவை கொலை செய்துவனுடைய மகனை நீ திருமணம் செய்து கொண்டு இருக்கிறாய் என்று எழுதியிருந்தது.
அதைப் படித்த ஆத்விக் அதிர்ச்சியாக நிமிர்ந்து அன்வியை பார்க்க....
தன் கண்களாலேயே அவன் கையில் இருந்த கடிதத்தை காட்டி படி என்றால்.
ஆதவிக்கின் கண்களில் கண்ணீர் தேங்கி இருக்க தன் கையில் இருந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்தான் .
இப்படி உன் அப்பாவை கொன்னவனுடைய மகனையே நீ கல்யாணம் பண்ணி இருக்கிறாய் என்று நினைத்து பார்த்து இருப்பியா அன்வி .
உன் அப்பாவையும் அம்மாவையும் லாரி ஏற்றி துடிதுடிக்க கொண்டவனுடைய மகன் தான் இந்த ஆத்விக் .
உன் அப்பாவை கொன்றவனுடைய அப்பா இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் அவர் சாகவில்லை.
உன் அப்பாவை கொன்றுவிட்டு ஆதவிக்கின் அப்பா நிம்மதியாக ஒரு இடத்தில் மறைவாக இத்தனை வருடமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
காலம் வரும்போது கண்டிப்பாக ஆதவிக்கின் அப்பா உங்கள் முன்பு வருவார்.
உன் அப்பாவிற்கு காரணமானவனின் மகனை நீ திருமணம் செய்து கொண்டு இருக்கிறாய் இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை என்று தான் உனக்கும் அவனுக்கும் முதலிரவு நடக்கப்போகிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
அவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா வேண்டாமா என்பதை நீயே முடிவு எடுத்துக் கொள்.
உன் அப்பாவிடம் வேலை பார்த்து அவரிடம் விசுவாசமாக இருக்கிறேன் என்று சொல்லி அவர் உயிரையே பறித்திருக்கிறான். இந்த ஆதவிக்கின் அப்பா.
அப்படிப்பட்டவனோடு வாழ வேண்டுமா என்பதை நீயே முடிவு செய்து கொள் என்று முடிந்திருந்தது அந்த கடிதத்தில்.
கடிதத்தை யார் எழுதியிருப்பார்கள் என்று ஆதவிக்கிற்கு தெரியவில்லை அந்த கடிதத்திலும் அதைப் பற்றி விபரங்கள் எல்லாம் எதுவுமே இல்லை.
அதை படித்துவிட்டு தன் கையில் இருந்து மற்றும் சில போட்டோக்களை பார்க்க....
அதில் அன்வியின் அப்பா அம்மா இருந்து கார் ஆக்சிடெண்டில் இருந்து கிடந்த போட்டோவும் .
அதனோடு அந்த இடத்தை விட்டு ஆத்விக் அப்பா தப்பித்துச் செல்வது போன்ற ஒன்று இரண்டு போட்டோக்களும் அதில் அடங்கியிருந்தது.
எல்லாம் பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் வந்து மறைக்க தன் கைகளில் இருந்த போட்டோக்களின் மீது ஆதவிக்கின் கண்ணீர் துளிகள் விழுந்தது.
அவன் அழுது கொண்டு நின்றிருப்பதை அமர்ந்திருந்ததை பார்த்த அமுதாவிற்கு மனம் கனத்துப் போக வேகமாக அருளின் அருகில் வந்தவர் அவன் கையில் இருந்த லெட்டரையும் போட்டோவையும் பிடுங்கி அதில் என்ன இருக்கிறது என்று பார்க்க....
ஆத்விக் அவரிடம் இருந்து அந்த லெட்டரையும் போட்டோவையும் பறிக்கப் போக அதற்குள் அதிலிருந்து போட்டோவை பார்த்ததும் அமுத அதிர்ச்சியாகி அப்படியே நின்றார்.
அவர் அம்மா அருகில் வந்த நிலாவும் அவர் கையில் இருந்த லெட்டர் வாங்கி அவசர அவசரமாக படித்தவள் அதிலிருந்து செய்தியை படித்ததும் இந்த சின்ன பெண்ணிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழுகையினுடே திரும்பி ஆத்விக்கை பார்க்க...
ஆத்விக் அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் நின்று இருந்தான். அவனிடம் ஓடிச் சென்ற நிலா அவனை கட்டிக்கொண்டு அண்ணா!! என்று அழுதால்.
இவர்கள் மூவரும் கண்களில் கண்ணீரோடு நின்றிருந்ததே பார்த்த அன்வியின் மனம் கனத்தது. கட்டிலில் இருந்து சிரமப்பட்டு எழுந்தவள் எழுந்து வந்து அமுதாவிடம் வந்தவள் அவர் கையைப் பிடித்து அழித்து வந்து கட்டில் அமர வைத்து.
என்ன அத்தை அப்படியே உறைந்து போய் நிக்கிறீங்க. இந்த போட்டோவையும் அந்த லெட்டரையும் படிச்சிட்டு நான் உங்களையும் ஆதவிக்கையும் வெறுத்து ஒதுக்கி என் வாழ்க்கையில் இருந்து உங்க எல்லாரையும் ஒதுக்கி வச்சிடுவேன்னு பிளான் பண்ணி தான் சரியா எங்க ரிசப்ஷன் அன்னைக்கு நைட் என் கையில இந்த கவர் கிடைக்கிற மாதிரி பண்ணி இருந்தாங்க.
ஆனா என் தாத்தா அதுக்கு முன்னாடியே உஷார் ஆகி அந்த கவரை என் கைக்கு கிடைக்க விடாம செஞ்சிட்டாரு.
ஆத்விக் வீட்டுக்கு மண்டபத்தில் இருந்து வந்துட்டு இருக்கும்போது என்னுடைய போனுக்கு அந்த போட்டோஸ் எல்லாம் வந்துடுச்சு.
கீழே ஃபஸ்ட் நைட் காக ரெடியாக இருந்த அந்த அறையில் இருக்கும் போது தான் நான் யாருக்கும் தெரியாம எனக்கு வந்த போட்டோஸையும் அதிலிருந்து அந்த லெட்டர் பத்தி விவரங்களையும் படிச்சேன் என்றாள்.
அமுதா அதிர்ச்சியாக அன்வியை பார்த்து எந்த விஷயம் உனக்கும் ஆதவிக்கிற்கும் தெரிய கூடாதுன்னு நானும் உன் தாத்தாவும் மறைத்தோமோ அந்த விஷயம் உங்களுக்கு தெரிந்து விட்டது என்று சொல்லி அழுதார் அமுதா.
❤️
ஹலோ பிரெண்ட்ஸ் 🌹
Facebook group link
கருத்துகள்
கருத்துரையிடுக