ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹
மறுநாள் காலை சூரியன் தன் ஒளி கற்றைகளை வீசிக்கொண்டு வெளியே வந்தது.
ஒவ்வொருவராக இறங்கி கீழே வர....
ஹாலில் ஆத்விக் அமர்ந்து இருந்தான்.
வந்தவர்கள் எல்லாம் ஆத்விக்கிடம் வந்து என்ன ஆத்விக் சீக்கிரமாக எழுந்து வந்துட்ட ஹாஸ்பிடல் போய் வந்தியா, இல்ல தூங்கி இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டியா என்று கேட்டனர்.
தூக்கம் வரல அதனால்தான் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கேன் என்றான் ஆத்விக் .
முதலில் வந்த அமுதாவும் வாசனும் இதை கேட்டவர்கள் பின்பு அவனோடு சேர்ந்து ஹாலிலேயே தங்களுக்கும் காபி கொண்டு வரச் சொல்லி அவனோடு பேசிக்கொண்டு காபி குடிக்க ஆரம்பித்தனர்.
தேன்மொழி, முருகவேளும் இவர்களோடு சேர்ந்து காபி குடிக்க சிறிது நேரத்தில் சூர்யாவும் வந்து விட்டான்.
வந்ததும் நேராக ஆத்விக்கின் அருகில் சென்று அமர்ந்து அப்புறம் சகல என்ன இவ்வளவு சீக்கிரமாக எழுந்து வந்துட்டீங்க.
என் மாமன் பொண்ணு உங்களை அவ்வளவு சீக்கிரம் வெளியே விட்டுட்டாளா என்று நக்களாகக் கேட்டேன் சூர்யா.
ஆத்விக் அதற்கு பெரிதாக எந்த ஒரு ரியாக்ஷன் காட்டாமல் மெலிதாக சிரித்து வைக்க...
வழக்கமாக அவன் அன்வியை பற்றி ஆதவிக்கிடம் சேர்த்து பேசுவையில் அவன் முகம் பிரகாசமாகும்.
ஆனால் இன்று ஏன் இப்படி சோகமாக இருக்கிறான் என்று சூர்யா அவனைப் பார்த்தான் ...
மற்றவர்களுக்கும் அவன் மனதில் தோன்றியது போலத்தான் தோன்றியது.
நிலாவும் யமுனாவை வலுக்கட்டாயமாக பெட்ரூமில் இருந்து வெளியே அழைத்து வந்து ஹாலில் சூர்யாவுடன் அமரச் சொல்லிவிட்டு சென்று யமுனாவிற்கு சேர்த்து காபி எடுத்துக்கொண்டு வந்தாள் .
அப்போது அன்வியும் கீழே வர தான் கொண்டு வந்த காபியை அன்வியிடம் கொடுத்துவிட்டு தனக்கு காபி எடுக்க கிச்சனுக்குள் சென்றாள் நிலா.
அனைவரும் ஹாளுக்கு வந்து விடவே ஆத்விக் எல்லோரையும் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்தவன்.
நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்காகத்தான் காலையில நேரமே எழுந்து வந்துட்டேன் என்றான் ஆத்விக் .
அவன் முகம் சரியில்லாத போதே வாசனுக்கு தோன்றியது ஏதோ முக்கியமான விஷயத்தை நினைத்து தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று நினைத்திருந்தார்.
அவர் நினைத்தது போலவே இப்போது ஆதவிக்கும் முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்றதும் என்ன சொல்லப் போகிறான் என்று ஆர்வமாக அனைவரும் அவனைப் பார்க்க..
அதற்குள் நிலாவும் வந்துவிட அவளை அழைத்து தன்னருகில் அமர வைத்துக் கொண்ட ஆத்விக் .
சூர்யா அன்வி ஒரு இருவரையும் பார்த்து யமுனாவை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலில் இருந்து ஒரு வயதானவரை நம்ம ஹாஸ்பிடல் ஷிப்ட் பண்ணுவோமே ஞாபகம் இருக்கா? என்றான் ஆத்விக் .
ம்ம்ம்...ஆமா... யாரோ கூட அவர் நெஞ்சிலே கம்பியால குத்திட்டாங்கன்னு அந்த டாக்டர் சொல்லிட்டு இருந்தாறே அந்த பேஷண்ட்டா என்றான் சூர்யா.
ஆமா அவரே தான் என்றான் ஆத்விக் .
சரி ஏதோ முக்கியமான விஷயம் சொல்றேன்னு சொல்லிட்டு சம்பந்தமே இல்லாம அந்த பெரியவர் பத்தி இங்கே என்ன பேசிக்கிட்டு இருக்க என்றான் சூர்யா.
சம்பந்தம் இருக்கிறதுனால தான் அந்த பெரிய விருப்பத்தை இங்கே இப்போ பேசுறேன் என்றான் ஆத்விக் .
அப்படியா அப்படி என்ன சம்பந்தம் என்றான் சூர்யா.
நிலாவை பார்த்துவிட்டு தன் அம்மாவை பார்த்தவன் .
அந்தப் பெரியவர் வேற யாரும் இல்ல எங்களோட அப்பா தான் என்று நிலாவின் தோளில் கையை போட்டு அவள் அழுத்தம் கொடுத்து சொன்னான் ஆத்விக் .
ஆத்விக் சொன்னதைக் கேட்டு உறைந்து போய் அமுதாவும் நிலாவும் திரும்பி அருளை பார்க்க...
மற்றவர்களும் அதிர்ச்சியில் தான் அவனைப் பார்த்தனர் ஆனால் நிலாவிற்கும் அமுதாவிற்கும் இருந்த அதிர்ச்சி தான் சற்று அதிகமாக இருந்தது.
காரணம் ஆத்விக் அப்பா இறந்து போய்விட்டார் என்று தான் இவர்களுக்கு தெரியும்.
ஆனால் ஆத்விக் சொல்வதை பார்த்தால் அவர் உயிரோடு இருப்பது எப்படி என்பது புரியாமல் அமுதாவும் நிலாவை ஆத்விக் பார்க்க...
நீங்க எல்லாரும் அதிர்ச்சியாகறது எனக்கு நல்லாவே புரியுது எப்படி என்ன இறந்து போயிட்டதா சொன்ன என்னோட அப்பா.
உயிரோட இருக்காருன்னு தானே எல்லாரும் யோசிக்கிறீங்க என்றவன் அனைவரையும் பார்க்க...
ஆமாம் என்று அனைவரும் தலையாட்டினர்.
அவர் இத்தனை வருஷமா ஒரு இடத்துல அடைக்கப்பட்டு இருந்திருக்காரு.
இத்தனை வருஷமா நாங்க இருந்துட்டு தான் நினைச்சுட்டு இருந்த எங்களோட அப்பாவை.
அவர் ஒரு ஆக்சிடென்ட்ல இருந்த தான் ஜோடிச்சு கதை கட்டி விட்டுட்டு அவரை கடத்திக் கொண்டு போய் ஒரு இடத்துல அடச்சு வச்சு அவர் அடிச்சு கொடுமைப்படுத்தி இருக்காங்க என்றான்.
இத்தனை வருஷமா அவர ஒரே இடத்தில அடச்சு வச்சிருந்தவங்க இவருக்கு உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டதால...
இனியும் இவரை வச்சிருக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லைன்னு சொல்லி அவர் இருந்த இடத்திலிருந்து அடுச்சு வெளியே விரட்டி விட்டுட்டாங்க.
விரட்டி விட்டதும் பத்தாம அவரோட நெஞ்சில ஒரு பெரிய கம்பியை குத்தி வந்து ஏதோ ஒரு இடத்தில தூக்கி போட்டுட்டாங்க.
வழியில் வந்த ஒருத்தர் தான் இவரை காப்பாற்றிக் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காரு.
எனக்கு முதல்ல அவரைப் பார்த்ததும் என் அப்பாவை போலவே அவர் விவசாயிகளும் இருக்க முதலில் சந்தேகம் இருந்தது.
அதன் பின்பு அவர் ஆபரேஷன் முடிந்து கண் விழித்ததும் அவரிடம் பேசியதில் உண்மையாகவே அவர்தான் என் அப்பா என்பதை நான் நேற்று தான் நான் தெரிந்து கொண்டேன் என்றான் ஆத்விக் .
ஆத்விக் சொல்வதைக் கேட்டு அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தார் அமுதா.
எத்தனை வருடம் கழித்து தன் கணவர் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தியை கேட்டு சந்தோஷப்படுவதா.
இல்லை இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை நினைத்து வருத்தப்படுவதா என்று புரியாமல் குழப்பத்தில் அமர்ந்திருந்தார்.
அனைவரும் எதுவும் பேசாமல் குழப்பத்தோடு அமர்ந்திருக்க...
உன்னிடம் எழுந்து வந்து அமர்ந்த ஆத்விக்கின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டு.
இந்த விஷயத்தை சொன்னதுக்காகத்தான் நேற்றிலிருந்து முகத்தை இப்படி வச்சுக்கிட்டு இருந்தியா என்று கேட்டவள்.
சந்தோசமான விஷயம் தானே ஆத்விக் இதற்கு ஏன் முகத்தை இன்னும் இப்படியே வச்சிருக்க.
சரி நம்ம எல்லாம் கிளம்பி போய் ஹாஸ்பிடல்ல இருக்க மாமாவ பார்த்துட்டு வந்துடலாமா என்று அனைவரையும் பார்த்து கேட்டாள்.
அன்வியின் கைக்குள் இருந்த தன் கையை மெதுவாக விளக்கிக் கொண்ட ஆத்விக் .
அவளையும் வாசனையும் பார்த்து முதல்ல நான் சொல்ல வரத முழுசா கேட்டுட்டு அதுக்கு பிறகு என் அப்பாவை பார்க்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கோங்க என்றான் ஆத்விக் .
உடனே அன்வி அவசரமாக அவனை தடுத்தவள் அது எல்லாம் ஒன்னும் தேவையில்லை.
சும்மா என்ன அதையும் இதையும் சொல்லிக்கிட்டு இருக்க எப்படியோ உன்னோட அப்பா கிடைச்சுட்டாரு தானே முதல்ல நம்ம போய் அவரை பார்ப்போம் அவர் குணமாகி வந்த பிறகு எல்லாமே பேசிக்கலாம் என்றால்.
இல்ல அன்வி நான் என்ன சொல்ல வரேன்னு நீ கொஞ்சம் பொறுமையா கேளு இப்படி அவசரப்படாதே என்றான் ஆத்விக் .
நீ சொல்றதில்ல இதுக்கு மேல எதுவும் கேட்கிறதா இல்லை போதும் நீ காலையில கொடுத்த சர்ப்ரைஸ்.
மறுபடியும் எதையும் சொல்லிட்டு இருக்காத நான் போய் ரெடி ஆயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சோபாவில் இருந்து எழுந்து மேலே செல்ல போக...
அது தான் சொல்வதை முழுவதுமாக கேட்காமல் எழுந்து செல்லும் அன்வியை பார்த்து சற்று கோபம் வர...
ஆத்விக் சோபாவில் இருந்து எழுந்தவன் அன்வி எனக்கு டைவர்ஸ் வேண்டும் என்றான் சத்தமாக...
ஆத்விக் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கவும் மாடிக்கு செல்லப் போனவள் அப்படியே உறைந்து போய் நிற்க....
அவளைப் போலவே அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியாகி திரும்பி அருளைப் பார்த்தனர்.
அமுதாவும் நிலாவும் பதறிக் கொண்டே என்ன ஆத்விக் பண்ணிட்டு இருக்க...
நீ சொல்றது என்னன்னு உனக்கு புரியுதா? இப்போ எதுக்கு தேவையில்லாம இந்த வார்த்தையை விட்ட..
எதுக்கு அன்வியை டைவர்ஸ் பண்றேன்னு சொல்ற ஆத்விக் என்றார் அமுதா பதட்டமாக .
ஆமா அண்ணா அண்ணியும் நீயும் சந்தோஷமா தானே இருக்கீங்க.
அப்புறம் எதுக்கு இப்படி டைவர்ஸ் அது இதுன்னு தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க.
அண்ணி மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு அண்ணா இப்படி எல்லாம் பேசாதே என்றால் நிலா வருத்தமாக.
இவ்வளவு நேரம் பேசாமல் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளா கூட எழுந்து வந்து ஆத்விக் முன்பு அவன் கையை பிடித்து மண்டியிட்டு அமர்ந்தவள்.
மாமா ஏன் இப்படி சொன்னீங்க... எனக்கு நடந்த பிரச்சனை எல்லாம் பார்த்துட்டு எங்க வீட்ல எப்பவுமே இதே போல பிரச்சனைகள் இருந்துட்டே இருக்கு.
இந்த மாதிரி வீட்ல எப்படி நிம்மதியா இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு டைவர்ஸ் வேணும்னு கேக்குறீங்களா என்றான் யமுனா .
அவள் தலையை பாசமாக வருடி கொடுத்த அருள். நீங்க எல்லாம் இந்த நிலைமையில கஷ்டப்பட்டுட்டு இருக்கிறதுக்கு முக்கிய காரணமே என்னோட குடும்பம் தான் என்றான் ஆத்விக் .
என்ன ஆத்விக் சொல்ல வர இப்போ எதுக்கு தேவையில்லாம எதையெதையோ பேசிட்டு இருக்க என்றார் வாசன் சற்று கோபமாக.
அப்பா ஆத்விக் எதுவும் சொல்லாதீங்க... அவன் இந்த மாதிரி ஒரு நாள் வந்து என்கிட்ட டைவர்ஸ் கேட்பான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்றால் அன்வி .
காலையிலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வந்து கொண்டு இருக்க.. இதை எல்லாம் கேட்டு தாங்க முடியாமல்.
ஏற்கனவே குழப்பத்தில் இருந்து அமுதா தன் மகனும் மகளும் பிரிவது தன் குடும்பத்தால் என்று அருள் சொல்லவும்.
அவருக்கு ஏதோ விஷயம் பிடிபட்டது போல தோன்ற அதே பதட்டத்திலேயே அப்படியே சேரில் இருந்து பாரு மயங்கி சரிந்தார்.
அவரை மயங்கி சரிந்ததை பார்க்க அன்வி ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டவள் அமுதாவின் கன்னத்தை தட்டி மயக்கத்தில் இருந்தவளை எழுப்ப முயற்சித்தாள்.
ஆத்விக் வேகமாக எழுந்து அவன் அம்மாவிடம் வந்தவன் அவர் நாடியை பிடித்துப் பார்த்து அவர் அதிர்ச்சியில் தான் மயங்கி இருக்கிறார் என்பதை உணர்ந்தவன் அவரை உடனே தூக்கிக் கொண்டு போய் அமுதாவின் அறையில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்தான்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து அமுதா கண்விழிக்கவும். அவர் அருகில் ஆத்விக் அவரும் பின்னால் அன்வியும் நின்றிருக்க...
மற்றவர்களும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அந்த அறையில் தான் இருந்தனர்.
அவன் அம்மாவை என் கையைப் பிடித்துக் கொண்ட ஆத்விக் அம்மா நீங்க இதெல்லாம் நினைச்சு அதிர்ச்சியாக ஆகாதீங்க என்றான்.
ஆத்விக் இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ டைவர்ஸ் பண்றேன்னு சொல்ற என்று கேட்டார் அமுதா.
அம்மா நான் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்க மாட்டேன் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும்.
என்னால இனிமேல் அன்வி கூட சேர்ந்து வாழ முடியாது. இப்பவே இந்த வீட்டை விட்டுவிட்டு போயிடலாம் நம்மளை வீட்டுக்கு திரும்ப போயிடலாம் ஹவுஸ் ஓனர் கிட்ட ஏற்கனவே பேசிட்டேன் இன்னைக்கு நாம எல்லாரும் அங்கு வந்து விடுவோம் என்று சொல்லி என்று ஆத்விக் சொல்ல...
அன்விக்கு ஆத்விக்கின் மேல் ஆத்திரமாக வந்தது.
இவன் நடந்து கொள்வதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. ஆதவிக்கின் பின்னால் இருந்த அன்வி அவன் தோலை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவள்.
எங்கே என் முகத்தை நேருக்கு நேரா பார்த்து இந்த வீட்டை விட்டு போறேன்,என்ன டைவர்ஸ் டைவர்ஸ் பண்றேன்னு இன்னொரு வாட்டி சொல்லு பார்க்கலாம் என்று கோபமாக அன்வி கேட்க...
இல்ல அன்வி அது வந்து....நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்க என்று ஆத்விக் சொல்ல வந்த விஷயத்தை கூற வர...
அன்வி ஆத்விக்கின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அரைந்தவள். நீ உன்னோட மனசுல என்ன தான் டா நினைச்சிட்டு இருக்க.
நீ எதை சொன்னாலும் எல்லாரும் எதுவும் மறுப்பு சொல்லாம சரி சரின்னு போயிடுவாங்க நினைச்சுட்டியா.
இவன் பாட்டுக்கு வருவானம் கல்யாணம் பண்ணிக்க வாணாம், இவனுக்கு வேண்டாம் என்று சொன்னதும் டைவர்ஸ் வேணும்னு சொல்லிட்டு. என்னை விட்டு விட்டு போறேன்னு சொல்லுவானாம்.
நாங்களும் அதையெல்லாம் கேட்டுட்டு சரி சரின்னு உனக்கு தலையாட்டிட்டு போகுனும்னு நினைக்காத ஆத்விக் .
இப்போ மட்டும் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போயிட்டா அதுக்கப்புறம் நீ என்ன உயிரோட பார்க்கவே முடியாது என்று அன்வி அருகில் கட் பண்ண வைத்திருந்த கத்தியை எடுத்து தன் மணிக்கட்டுக்கு அருகில் வைத்து அவனை பார்த்தபடி சொன்னால் அன்வி .
அன்வி இவ்வளவு தூரம் செல்வதை நினைத்து ஆதவிக்கிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியாக நின்று விட்டான்.
❤️
ஹலோ பிரண்ட்ஸ் 🌹
Facebook group link
Whatsapp channel link
கருத்துகள்
கருத்துரையிடுக