ஹலோ பிரெண்ட்ஸ்
அர்ஜுனுக்கு மனதிற்குள் ஒரு புயலே அடித்துக்கொண்டு இருந்தது .
இரவு முழுவதும் ரசிகா தன்னை புறக்கணிப்பதை எண்ணி அவன் தூங்கவே இல்லை . காலை வழக்கம் போல 4 மணிக்கு எழுந்துவன் உடற்பயிற்சி செய்வதற்காக அயனுக்கும், அர்ஜூனுக்கும் அவர்கள் வீட்டிலேயே கட்டமைக்கப்பட்டு இருந்த நவீன உபகரணங்களுடன் கூடிய ஜிம்மிற்குள் நுழைந்தான் அர்ஜுன்.
ரசிகாவின் மேல் அவனுக்கு சொல்ல முடியாத கோபம் உண்டானது தன்னை சதுரமாக கூட அவள் பார்க்காமல் இப்படி புறக்கணிப்பதை எண்ணி அவன் மனம் புழுங்கி கொண்டு இருந்தது .
அந்த நினைப்போடே தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான் . ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உடற்பயிற்சி செய்ததின் விளைவாக அவன் அணிந்து இருந்த கை இல்லாத பனியனும் ஷார்ட்ஸும் ஈரம் ஆகி இருக்க...பனியனை கழட்டி அருகில் இருந்த சேரில் வைத்துவிட்டு டவலை எடுத்து உடலை துடைத்துக்கொண்டே ஜிம்மில் இருந்த பால்கனிக்கு இயற்கை காற்றில் சிறிது நேரம் நிற்கலாம் என்று அங்கு வந்து நின்றான்.
அப்போது அவன் வீட்டு வாசலில் இருந்து அந்த நேரத்தில் ஒரு பெண் பேசும் சத்தம் வந்தது . அடஙக குரலை கேட்டது போல இருக்க...யார் என்று அந்த மங்கலான இளம் காலை வெளிச்சத்தில் வாசலில் தன் வீடு வேலை ஆளுடை சண்டை போட்டுகொண்டு இருப்பதை பார்த்தான் அர்ஜுன் .
அண்ணா சொன்னகேளுங்க...நான் வாசல் பெருகி கோலம் போடுரேனே என்னை ஏன் விட மாதிரிங்க...நான் நல்ல கோலம் போடுவேன் என்னை நம்புங்க என்று அவர் கையில் இருந்த துடைப்பத்தை வாங்க முயற்சித்துக்கொண்டு இருந்தால் ரசிகா .
அம்மா சொன்னகேளுங்க நீங்க இந்த வேலை எல்லாம் செய்யுறதை பார்த்துட்டா aprom என் வேலை காலி ஆகிரும் சொன்ன கேளுங்க அம்மா என்று தன் கையில் இருக்கும் துடைப்பத்தை கொடுக்க மறுத்தார் அந்த வேலை ஆள் .
இப்போ என்ன நான் இந்த் வேலை செய்றது யாருக்கும் தெறியக்கூடாது அப்படித்தானே என்றவள் தன் கன்னத்தில் கை வைத்து யோசித்தவள் . ஆஹ்...ஐடியா ...தினமும் நான் நேரமே எழுந்து வந்து வாசல் கூடி தெளிச்சு கோலம் போட்டுடறேன் யாவும் பாக்குறதுக்கு முன்ன வேலை முடிச்சிட்டு போயிடுறேன் என்றால் ரசிகா .
இல்லை ம்மா... வேணாம் இது சரி வரத்து யாராவது பார்த்துட்டா அவ்ளோ தான் என்றார் அந்த வேலை ஆள் பயந்து கொண்டு .
அண்ணா..அண்ணா... ப்ளீஸ் என்று அவர் கையில் இருந்த துடைப்பத்தை விடாமல் பிடித்துக்கொண்டு சிறு பிள்ளை போல அடம்பிடித்தாள் .
அதை மேலே நின்று பார்த்துகொண்டு இருந்த அர்ஜுன் தன்னை அறியாமல் சிரித்துக்கொண்டு நின்று இருந்தான் .
அம்மா இப்படி பண்ணலாம் உங்களுக்கு இவ்ளோ பெரிய வாசல்ல தினமும் கோலம் போடணும் அவ்ளோ தானே என்றார் .
ஆமாம் என்று தலையை வேகமாக ஆட்டினாள் ரசிகா .
அப்போ நான் தினமும் வந்து வாசல் கூட்டி பெருகிடுறேன் .அதுக்கு பிறகு நீங்க vandhu கோலம் மட்டும் போட்டுக்கோங்க யாராவது கேட்டா கோலம் போட மட்டும் வேற ஆளை வேளைக்கு வெச்சிருக்கேன்னு சொல்லிடறேன் மா..என்னால அதை மட்டும் தான் பண்ண முடியும் என்றார் அந்த வேலை ஆள்.
அவர் இதற்கு ஒத்துக்கொண்டதே போதும் என்று நினைத்தவள் சரி அப்போ நாளையில் இருந்து நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருவோம் . இன்னிக்கு மட்டும் நானே வாசல் கூட்டி , பெருக்கி ,கோலம் போட்டுடறேன் என்றால் ரசிகா அழகாக சிரித்துக்கொண்டே .
சரிங்க அம்மா அப்போ நான் மார்க்கெட் போய்ட்டு வந்துறேன். யாராவது வரதுக்குள்ள வேலையை முடிச்சிட்டு போயிருங்க மா.. என் வேளைக்கு உலை வெச்சீராதீங்க என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப...
என்னவோ பெரிய அலுவலகத்தில் தனக்கு வேலை கிடைத்தது போல சந்தோசமாக அவர் கையில் இருந்த துடைப்பத்தை வாங்கியவள் தான் கட்டி இருந்த சேலையை கெண்டைக்கால் தெரியும் அளவிற்கு தூக்கி சொருகிக் கொண்டு குளித்து ஈரத்தலையோடு முடிந்து இருந்த துண்டை ஒருமுறை சரி செய்துவிட்டு குனிந்து அவ்வளவு பெரிய வாசலை கூடி பெருக்கி நீர் தெளித்து முடித்தாள் .
அப்பாடா ஒரு வழியா கூடி ,பெருக்கியாச்சு..இனி அடுத்து கோலம் போட வேண்டியாயது தான் பாக்கி என்று கோலம் பொடியை எடுத்து குனிந்து கோலம் போட ஆரம்பித்த்தால்.
ரசிகா குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதை மேலே இருந்து தன்னையும் அறியாமல் ரசித்துக்கொண்டு இருந்தவனுக்கு அவள் முகம் நன்றாக தெரியாததால் வேகமாக ஜிம்மில் இருந்து வெளியே கீழே செல்வதர்காக வந்தான் . அவன் வெளியே வரவும் அப்போது உள்ளே அயன் நுழையவும் சரியாக இருந்தது .
அர்ஜுனை பார்த்ததும் என்ன இவ்ளோ அவரசரமா வெளியே போற..அதுக்குள்ள ஒர்க் அவுட் முடிச்சுட்டியா என்றான் அய்ன்.
ஆமா அண்ணா முடிச்சுட்டேன் அப்டியே கொஞ்சம் ஜோக்கிங் போயிடு வரலாம்னு veliye வந்தேன் என்றான் .
சரி என்று தலையாட்டிவிட்டு அயன் உள்ளே செல்ல...அங்கிருந்து மெதுவாக அந்த அறையை விட்டு தள்ளி வந்தவன் அயன் உள்ளே சென்றுவிட்டன என்று பார்த்துவிட்டு வேகமமாக மாடியில் இருந்து இறங்கி கீழே ரசிகாவை பார்க்க ஓடினான் .
கீழே அவன் வரவும் வாசலில் கோலம் போட்டுவிட்டு தன் தலையில் இருந்த ஈரத்துண்டை பிரித்துவிட்டுக்கொண்டே உள்ளே வந்தால் ரசிகா .
அவளை பார்த்ததும் வேகமாக அவள் கண்ணில் படாமல் படிகளில் இருந்து வேகமாக இறங்கியிற் அர்ஜுன் படிகளுக்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டான்.
ரசிகாவும் தலையை துவட்டியபடியே தன் அறைக்குள் செல்லாமல் செண்பகம் அறைக்குள் நுழைந்தாள்
அவள் சென்றதை உறுதி செய்து கொண்ட அர்ஜுன் வாசலுக்கு வந்து பார்க்க...மிக அழகாக ஒரு தாமரை பூ போட்டு அதை சுற்றிலும் ரங்கோலியால் டிசைன் வரைந்து வெறும் வெள்ளை கோலப்பொடியில் இவளவு அழகாக கோலம் போட முடியுமா என்னும் அளவிற்கு அழகாக கோலம் போட்டு இருந்தால்.
அதை பார்த்தவனின் புருவம் உயர்ந்தது நான் மேலே இருந்து கீழே வரதுக்குள்ள இவளவு பெரிய கோலத்தாய் அதுவும் இவ்வளவு சீக்கிரத்துல போட்டுட்டாலே என்று ஆச்சர்யப்பட்டான் .
உடனே தன் ஷார்ட்ஸில் இருந்த போனை எருது அந்த கோலத்தை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தவன் அதிக பார்த்தது சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைய...செண்பகத்தின் அறைக்குள் இருந்து வெளியே வந்த ரசிகா செண்பகம் காபி கேட்டதால் அவருக்கு கோபி போட நேராக கிட்சனுக்கு சென்றாள் .
செல்லும்போது வாசலில் நிழல் ஆடுவதை கண்டதும் யார் என்று ரசிகா திரும்பி பார்க்க அங்கே அர்ஜுன் கையில் மொபைலை வைத்துக்கொண்டு அழகு சிலையாய் நடந்து சென்று கொண்டு இருந்த ரசிகனை வாயை பிளந்து பார்த்த படி நின்று இருந்தான் .
அவனை அங்கு எதிர் பார்க்காத ரசிகா இவன் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்றான். இவனை பார்த்தாலே அவன் மீசையை பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் எடுக்க ஆரம்பிச்சிருது .இவனை பார்த்துட்டு இங்கயே நின்னுட்டு இருந்தா அவநை பார்த்தது நான் இப்படி நடுங்குறேன்னு நினைச்சிருவான் . அப்பறோம் எதுவும் கேள்வி கேட்டா அவ்ளோ தான் என்று சட்டென தன் முகத்தை திருப்பிக்கொண்டு கிச்சனுக்குள் ஓடிவிட...
அதை பார்த்த அர்ஜுனுக்கு அவள் செயல் முகத்தில் அடித்தார் போல ஆகிவிட்டது . ச்சே ..என்னை பார்த்தா இவளுக்கு எப்படி தெரியுது .இப்படி என்னை பார்க்கும்போது எல்லாம் முகத்தை திருப்பிட்டு போனா என்ன அர்த்தம் . இதை இப்பவே இவை கிட்டே கேட்டு ஆகணும் என்று கிச்சனுக்கு செல்ல போக..
அப்போது தான் குளித்து முடித்து எல்லோருக்கும் காபி போடலாம் என்று வந்த தேவகி வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்த அர்ஜுனை பார்த்தார்.
அர்ஜுன்..ஜோக்கிங் முடிச்சுட்டு வந்துட்டியா பா... என்று அவனிடம் வந்தார் .
ஆமாம் ம்மா...இப்போதான் வந்தேன் என்று சொல்லி சமாளித்தான்.
சரி வா..ப்பா...நான் காபி போட்டு தரேன் என்றார்.
இல்லை மா எனக்கு ரூமுக்கு காபி கொடுத்து விட்ருங்க நான் பொய் பிரெஷ் அப் ஆகுறேன் என்றவன் இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே அவனுக்கு முதுகு காட்டி நின்று இருந்த ரசிகனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு மேலே தன் அறைக்கு போய்விட்டான்.
அப்பாடா நல்ல வேலை இங்கே வராம மேலே போய்ட்டானா அவன் எங்கே இங்கே வந்து உக்கார்ந்திருவானோனு பயந்துட்டேன். தூரத்தில் அவனை பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் பதறுது .இதுல வானை கிடைத்துள்ள வெச்சு மட்டும் பார்த்தோம் அவ்ளோதான் என்று நினைத்துக்கொண்டு இருக்க..
ரசிகா என்ன டா...இவ்வளவு சீக்கிரத்துல எழுந்துட்டா போல இருக்கு ..என்ன பண்ற மா இந்த நேரத்துல கிச்சன்ல என்று கேட்டபடி அவளிடம் வந்தார் தேவகி.
நான் எப்பவும் நேரமே எழுந்து குளிச்சிட்டு கிட்சேனுக்கு சமைக்க வந்துருவேன் அத்தை . இங்கே புதுசா இருக்கிறதால எனக்கு வர கொஞ்சம் தயக்கமா இருக்கு என்றால் .
இதில் என்னமா இருக்கு ...இங்கே ரோஜாவுக்கு என்ன உரிமை இருக்கோ..அதே உரிமை உனக்கும் இருக்கு நீ எப்போ வேணா என்ன வேணாலும் செய்யலாம் இந்த வீட்டுல என்றார் தேவகி .
அப்போ நான் ஒன்னு கேட்பேன் நீங்க மறுக்கமா ஓகே சோழனும் எனக்கு என்றால் ரசிகா ஆர்வமாக .
ம்ம்.. சொல்லு ம்மா..என்ன? என்றார் தேவகி .
அப்போ தினமும் காலையில் எல்லாரும் சாப்பிட நானே சமைக்குறேனே . எனக்கு வீட்டில சும்மா இருக்க போர் அடிக்குது என்றால் .
அதெல்லாம் எதுக்கு மா இங்கே தான் அதை எல்லாம் செய்ய ஆளுங்க இருக்காங்களே என்று ரசிகா சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தார் .
அத்தை ப்ளீஸ் நான் காலையில் மட்டும் தன சமையல் செய்றேன்னு சொன்னேன் மத்த நேரத்துல அவங்க செஞ்சுக்கட்டுமே என்றால் கெஞ்சிக்கொண்டே.
என்ன பொண்ணு மா நீ சரி உனக்கு என்ன தோணுதோ செய் ஆனா காலையில் மட்டும் தான் சரியா என்றார் தேவகி .
சரிம்மா என்றவள் நீங்க உக்காருங்க நான் செண்பகம் அம்மாவுக்கு காபி போடுறேன் அப்படியே உங்களுக்கும் சேர்த்து போட்டுடறேன் என்றாள் .
சரிம்மா என்றவர் அங்கிருந்த சேரில் அமர..சிறிது நேரத்தில் காபி போட்டு முடித்து சூடாக எடுத்து வந்து தேவிகாவின் முன் வந்து வைத்தவள் . நீங்க குடிங்க நன் பொய் அம்மாவுக்கு கொடுத்துட்டு வரேன் என்றாள் .
செண்பகத்துக்கு தானே மா நான் கொண்டு போய் கொடுத்துறேன் . அம்மா முத்து எங்கே அவனை ஆளையே காணோமே என்ற தேவகி . அவர் மார்க்கெட் வரைக்கும் போயிடு வரேன்னு சொன்னாரு அத்தை என்றாள் ரசிகா .
ம்மா..அர்ஜு்னுக்கு காபி கொடுக்கணும் என்னால படி என்ற முடியாது மூட்டு வேற ரொம்ப வலிக்குது நீ கொஞ்சம் இந்த காபியை அவனுக்கு கொடுத்துறியா, அப்டியே அயனும் எழுந்து ஜிம்மில் தான் இருப்பான் அவன் வர நேரம் தான் அப்டியே அவனுக்கும் ,ரோஜாவுக்கும் கொடுத்துடுறியா என்று ரசிகாவை பார்க்க
ஐயோ ...இது வேரையா என்று சலித்துக்கொண்டு ரசிகா நிற்க..
அவள் எதுவும் பேசாமல் நிற்பதை பார்த்த தேவகி என்ன மா உனக்கு போக பிடிக்கலையின்னா பரவாயில்லை நானே மெல்ல படி ஏறி போய் அவனுக்கு கொடுத்துட்டு வரேன் என்றார்
அத்தை அதெல்லாம் ஒன்னும் இல்லை இந்த காபியை நீங்க குடிங்க நான் அவருக்கு சூடா போட்டுஎடுத்துட்டு போறேன் என்று காபி போடா செல்ல..
தேவகியும் சிரித்துவிட்டு செண்பகத்திற்கு காபியை எடுத்துக்கொண்டு சென்றார் .
ரசிகாவும் காபி போட்டு எடுத்துக்கொண்டு மேலே சென்றவள் முதலில் ஜிம்மில் இருந்த அயனுக்கு கொண்டு சென்றால். அவளை பார்த்ததும் ஒர்க் அவுட் செய்வதை நிறுத்தி விட்டு முது இல்லையா ரசிகா நீங்க எடுத்துட்டு வந்து இருக்கீங்க என்று ட்ரெயில் இருந்த இரண்டு காபியை எடுத்துக்கொண்டே கேட்டான் .
இல்லை நீங்க டிரேயில் வெச்சே எடுத்துக்கோங்க நான் இதை கையில் எடுத்துகிறேன் என்று அர்ஜுனுக்கு கொடுக்க வேண்டிய காபியை கையில் எடுத்துக்கொண்டு ட்ரேயை அவனிடம் நீட்டினாள் ரசிகா .
அயன் காபி ட்ரேயை வாங்கிக்கொள்ள.. முத்து அண்ணா மார்க்கெட் போய்ட்டாரு . அத்தை படி ஏற சிரமமா இருக்குனு சொன்னாங்க அதான் நான் எடுத்து வந்தேன் என்றவள் அயனை பார்க்க...
ம்ஹும்...நீங்க நேரமே எழுந்து குளிச்சு முடிச்சு எவ்ளோ லட்சணமா இருக்கீங்க... ஆனா என் பொண்டாட்டி இந்த காபி ஆறி ஐஸ் காட்டி ஆனாலும் எழுந்திருக்க நேரம் ஆகும் அவளுக்கு. இவ்ளோ சீக்கிரத்துல காபியா என்று சிரித்தவன் . சரி இன்னிக்கு சீக்கிரமே எழுப்ப ட்ரை பண்றேன் என்று ட்ரேயுடன் தன் ரூமிற்கு சென்றான் அயன் .
அவன் சொன்னதை கேட்டு சிரித்த படி அர்ஜுன் அறைக்கு முன் வந்து நின்ற ரசிகா உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசனையில் நின்று இருக்க ...
ஏன் வாசல் வரை வந்துட்டு என் ரூமுக்குள்ள வர அப்படி என்ன தயக்கம் நான் ஒன்னும் உங்களை கடிச்சு தின்னுற மாட்டேன் என்று உள்ளிருந்து அர்ஜுன் குரல் கொடுத்தான் .
அவன் குரல் கேட்டதும் சற்று துணுக்குற்ற ரசிகா . நான் இங்கே வந்தது இவனுக்கு எப்படி தெரிஞ்சுது ..என்று யோசித்தவள் அது சரி போலீஸ் இல்ல இவன் இவனுக்கா தெரியாது என்று தயங்கியபடி அவன் அறைக்குள் பாதி மூடி இருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அவனிடம் வசமாக மாட்டிக்கொள்ள போகிறோம் என்று தெரியாமலேயே
❤️
ஹலோ ஃபிரண்ட்ஸ் ❤️
Facebook link
ஸ்டோரி படிச்சிட்டு மறக்காம ரேட்டிங் குடுங்க பிரண்ட்ஸ் அதேபோல கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க 🙏😍
அதிருதடா நெஞ்சம் உன்னாலே இது ஒரு ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட். அதீத ரொமான்ஸும் காதல் காட்சிகளும் நிறைந்த கதை. காட்சிகளின் தேவைக்கேற்ப ரொமான்ஸ்கள் விரவிக் கிடக்கும். காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும் வார்த்தைகளும் வீரியமும் அதிகரித்திருக்கும்.
இந்த மாதிரியான கதையைப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லுங்கள்.
உங்கள் லயா 💕
❤️
கருத்துகள்
கருத்துரையிடுக