முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Episode -12 உள்ள போனா என்னை என்ன பண்ணுவானோ


ஹலோ பிரெண்ட்ஸ



முகில் ரோஜாவின் வீட்டிற்கே வந்து தன்னை ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் அயனை திருமணம் செய்து கொண்டாள் .



அயன் ரோஜா கழுத்தில் கட்டாய தாலி கட்டி கூட்டி வந்துவிட்டானோ என்று அவளிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டான் .



ரோஜாவின் இடையில் கைகொடுத்து அழுத்தம் கொடுத்த அயன் சொல்லு ரோஜா அதான் நியாயம் கேட்டு வந்து இருக்காரே மிஸ்டர் முகில் அவருக்கு பதில் சொல்லு...என்று அவளையே குறு குறுவென பார்த்துகொண்டு  இடையை அழுத்தினான் .



இதை அவர்கள் எதிரே  சோபாவில் அமர்ந்து இருந்த முகில் கவனித்தான் . ஆனால் ரசிகாவிற்கோ ,செண்பகத்திற்கோ அயன் செய்யும் லீலை தெரியவில்லை .

அப்போது தான் தோட்டத்தில் இருந்து வந்த தேவகியும் உள்ளே வந்தவர் இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து ரோஜா என்ன சொல்ல போகிறாள்.



இந்த முகிலை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் அப்போதைக்கு அயனை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொன்னாளா இல்லை உண்மையாகவே ரோஜாவிற்கு பிடித்து தான் தன் மகனை திருமணம் செய்துகொண்டாளா என்று அவரும் ரோஜா சொல்ல போகும் பதிலுக்கு காத்திருந்தனர் .



அனைவரும் ரோஜாவையே பார்க்க அவளுக்கு அது ஒரு மாதிரியாக போய்விட்டது . அவள் முகமும் வியர்த்து விட... இவனை யாரு இங்கே வர சொன்னது இப்போ இவனை நான் ஏன் கல்யாணம் செய்துக்கலையினு தெரிஞ்சு என்ன பண்ண போறான்   இவன். அறிவு கெட்டவன் அவன் மூஞ்சியும் , முழியும் எப்படி பாக்குறான் பாரு என்று தன் எதிரே இருந்த முகிலை மனதிற்குள் வறுத்தெடுத்தால் ரோஜா .

ரோஜா நான் பேசிட்டே இருக்கேன் நீ பதில் பேசாம இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் உனக்கு என்ன பிடிக்கலைன்னா கல்யாணத்தை முதலில் நிப்பாட்டி இருக்கலாமே மணமேடை வரைக்கும் வந்து அதுவும் தாலி கட்டுற நேரத்துல என் கையில் இருந்து தாலி பிடுங்கி இவன் உன் கழுத்துல தாலி கட்டிட்டான் என்று ரோஜாவின் இடையை வருடிக்கொண்டு இருந்த அயனை பார்த்து முகில் கோபமாக பேச ..



இவன் உன்ன மிரட்டி தாலி கட்டிட்டானா அவனுக்கு பயந்து தான் நீ எதுவும் பேசாம அமைதியா இருக்கியா அப்படி அவன் உன்னை மிரட்டி தான் தாலி கட்டி கட்டியிருந்தா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல இப்பவே நீ என் கூட கிளம்பி வந்துடு.

 நான் உனக்கு வாழ்க்கை தர தாயாரா இருக்கேன். இவன் கட்டின தாலியை கழட்டி எறிஞ்சிட்டு உனக்கு புது தாலி கட்டி என் பொண்டாட்டியா என் வீட்டுக்கு உன்ன கூட்டிட்டு போறேன் என்றான் முகில் .



அவன் பேசியது கேட்டு தேவகி ,செண்பகம் ,ரசிகா என மூவரும் ஆத்திரம் கொண்டு முகிலை பார்க்க...

ஆனால் இதை கேட்டு கோபப்பட வேண்டியவன் அமைதியாக ரோஜாவின் அருகில் அமர்ந்திருந்தான் .

அவர்கள் மூவருக்குமே ஆச்சரியம் தான் எந்த ஒரு உணர்ச்சியையும் அயன் காட்டாமல் அமர்ந்திருக்கிறான் என்று .

அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று அவன் கைக்குள் மாட்டியிருக்கும் ரோஜாவின் இடைக்கு தான் தெரியும் ஏற்கனவே அழுத்தம் கூட்டி இருந்தவன் முகில் ரோஜா கழுத்தில் அயன் கட்டிய தாலியை கழட்டி எறிந்து விட்டு அவனோடு வரச் சொல்லி தன் முன்னாலேயே கூப்பிடவும் ஆத்திரம் அதிகமானது. ஆனால் அவன் கோபப்படாமல் இருந்ததற்கு காரணம் ரோஜா அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று தான் பொறுமையாக அதே சமயம் உள்ளுக்குள் கனன்று எரிந்த கோபத்தோடு அயன் அமைதியாக அமர்ந்திருக்க...

முகில் இப்படி ஒரு வார்த்தையை சொன்னதும் ரோஜாவிற்கு பற்றி கொண்டு வந்ததே கோபம் சோபாவில் அமர்ந்திருந்தவள் விருட்டென எழுந்து வேகமாக முகிலிடம் வந்தவள் அவனைப் பார்க்க என்ன ரோஜா எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு இவங்க எல்லாரும் இருக்காங்கன்னு நீ பயப்படாதே நான் இருக்கேன் உனக்கு என்று பேசிய படியே சோபாவில் இருந்து எழுந்தான் அவன் எழுந்த வேகத்தில் ரோஜா பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தாள் .

ரோஜாவின் இந்த செயல் மற்ற மூவருக்கும் ஆச்சரியமே ஆனால் அயனோ அதை ரசித்து சிரித்தபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான்

ஏண்டா ராஸ்கல் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டுக்கே வந்து என் குடும்பத்து முன்னாடி என் புருஷன் முன்னாடி அவர் கட்டின தாலியை கழட்டி எறிஞ்சிட்டு உன் கூட வரச் சொல்லுவ எவ்வளவு தைரியம் உனக்கு உன்னை முதல்ல உள்ள விட்டதே தப்புடா அதுவும் இல்லாம சரிக்கு சமமா உன்ன உட்கார வைத்து இவ்ளோ நேரம் பேச விட்டு பார்த்தேன் பார்த்தியா அதுதான் நான் செஞ்சு பெரிய தப்பு முதல்ல இந்த வீட்டு விட்டு வெளியே போடா எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் நான் விருப்பப்பட்டு தான் இந்த கல்யாணத்தை பண்ணி இருக்கேன் சொல்லப்போனால் நான் சொன்னதுனால தான் என் புருஷன் என் கழுத்தில் தாலி கட்டினார். இனிமேல் ஏதாவது சாக்கு சொல்லிட்டு இந்த வீட்டு பக்கம் கால எடுத்து வச்ச நானே உன் காலை வெட்டி போட்டுடுவேன் முதல்ல வெளியே போடா என்று மீண்டும் அவனை ஓங்கி அறைந்தாள் ரோஜா .

ரோஜா தன்னை அடிப்பாள் என்று முகில் சிறிதும் எதிர்பார்க்கவில்லை அதுவும் அயன் முன்பு அவள் அடித்தது அவனால் தாங்க முடியவில்லை ஏற்கனவே அவனால் தான் தனக்கு இவ்வளவு பெரிய அவமானம் என்று இவர்கள் மீது பகை வளர்த்துக் கொண்டிருந்தவன் இப்போது ரோஜாவும் அவன் முன்பு தன்னை அவமானப்படுத்தி பேசி அறையவும் அவன் பகை உணர்வு மேலும் அதிகரித்தது .

ரோஜா எவ்வளவு தைரியம் இருந்தா நீ என்ன அடிச்சிருப்ப இதுக்கு நீ அனுபவிச்சு ஆகணும் ஏற்கனவே என்ன கல்யாணம் பண்ணிக்காம இவன் கூட வந்து என்னை அவமானப்படுத்திட்ட இப்போ என்ன அடிக்கவும் செஞ்சுட்டே இதுக்கு நீ அனுபவிச்சே ஆகணும் நீ மட்டும் இல்ல உன் கூட இருக்கிற ஒவ்வொருத்தரும் இதுக்கு பதில் சொல்லியே ஆகணும் என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியே சென்றான் .



அவன் சென்றதையே கோபத்தோடு ரோஜா பார்த்துக் கொண்டு இருக்க தன் வீல்சரை நகர்த்திக்கொண்டு ரோஜாவிடம் வந்த செண்பகம் அவள் கையை ஆதரவாக பற்றி நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் அவனை உள்ள வர வேண்டாம் என்று தடுத்தும் பார்த்தேன் ஆனா அவன் சொல்ல சொல்ல கேட்காம உள்ள வந்துட்டான். என்று அவர் வருத்தப்பட ...



கோபமாக நின்றிருந்த ரோஜா அவள் அம்மாவின் கரம் பற்றியதும் சற்று சாந்தமடைந்தவள் திரும்பி செண்பகத்தின் காலுக்கு அருகில் முட்டி போட்டு அமர்ந்து அம்மா நீங்க வருத்தப்படாதீங்க அது அவனோட புத்தி இது ஏற்கனவே நம்மளுக்கு தெரிஞ்சதுதானே அவனுக்கும் எனக்கும் கல்யாணம் நிச்சயமா இது ஆன பிறகு என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணினான்னு உங்களுக்கு தெரியாது அதுக்கெல்லாம் சேர்த்து வட்டி முதலமா தான் இப்ப நான் அவனை அடித்து  அனுப்பினேன் . அவன் பேசுறது எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க குலைக்கிற நாய் எப்பவும் கடிக்காது எனக்கு நல்லா தெரியும் என்றாள் .



அவன் பேசிட்டு போறது எல்லாம் பார்த்தா அவன் எதுவும் உன்னையும் மாப்பிள்ளையும் செஞ்சிருவான்னு எனக்கு பயமா இருக்கு நீங்க கொஞ்சம் அவகிட்ட இருந்து ஜாக்கிரதையாவே இருங்க என்று அயனையும் பார்த்து செண்பகம் கூற

செண்பகத்தின் அருகில் வந்த ரசிகா அம்மா நீங்க கவலைப்படாதீங்க அப்படியே அவன் எதுவும் செய்யணும்னு நினைச்சா இங்கே இத்தனை பேர் இருக்காங்க அவங்கள எல்லாம் மீறி அவனால எதுவும் செய்ய முடியாது தவிர ரோஜாவுக்கு ஒண்ணுன்னா அவ புருஷன் பார்த்துட்டு சும்மா இருப்பார் என்று நினைத்தீர்களா என்றால் ரசிகா .



தேவகியும் வந்து செண்பகத்தின் கவலைக்கு ஆறுதல் சொல்ல ...



இவர்கள் எல்லாம் தனக்கும் தன் அம்மாவிற்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க அங்கே அயன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான்.

 அவனைப் பார்த்த ரோஜா எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை எப்படி வச்சிட்டு உட்கார்ந்திருக்கான் பாரு என் இடுப்ப பிடிச்சு அந்த தடவு தடவிட்டு ஏதோ பால் குடிக்க தெரியாத பிள்ளை மாதிரி அமைதியா உக்காந்து இருக்கான் என்று அவனை முறைத்தவள் செண்பகத்தின் சேரை தள்ளிக்கொண்டு அவர் ரூமிற்கு சென்றாள் .

இங்கு ரசிகாவை பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்ததிலிருந்து அர்ஜுனுக்கு அவள் ஏன் தன்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் . அவள் அப்படி நடந்து கொண்டது அவன் மனதை போட்டு அடித்துக் கொண்டே இருந்தது .



ரோஜாவின் தோழி ரசிகாவை ஓரிருமுறை அவளோடு அர்ஜுன் பார்த்திருக்கிறான். அத்தோடு சரி அவளைப் பற்றி அவனுக்கு அவ்வளவாக தெரியாது இருக்கும் அவனை பார்த்தது கூட கிடையாது அப்படி இருக்கும்போது தன்னை பார்த்ததும் முதல் சந்திப்பிலேயே எதற்கு முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டும் .



தன்னை பார்த்ததுமே அவளுக்கு பிடிக்கவில்லையா என்று அவன் மனதை இந்த கேள்வி அறிந்து கொண்டே இருந்தது அவளைப் பார்த்து கேட்டு விட வேண்டும் என்று உடைமாற்றிவிட்டு தன் அறையை விட்டு வெளியே வந்தான் .



ஹாலில் தேவகி செண்பகத்துடன் அமர்ந்து கதை பேசியபடி ரசிகா இருக்க அவள் அருகில் அமர்ந்து ரோஜாவும் பேசிக்கொண்டு இருந்தால் .



அவர்கள் நால்வரையும் பார்த்தபடி  மாடியிலிருந்து படி இறங்கி வந்தான் அர்ஜுன் .



தன் மகன் வருவதை பார்த்ததும் சோபாவில் இருந்து எழுந்த தேவகி அடடே வாப்பா பிரஸ் ஆகிட்டியா சாப்பிட எதுவும் எடுத்து வைக்கட்டுமா சாப்பிடுறியா என்று கேட்டார் தேவகி .



அவ்வளவு நேரம் மற்றவர்களோடு சிரித்து கலகலவென பேசிக் கொண்டிருந்த ரசிகா அர்ஜுனன் பார்த்ததும் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் .



ஓரக் கண்ணால் பார்த்தபடியே சரிம்மா எடுத்து வைங்க எனக்கு கொஞ்சம் வெளியே போற வேலை இருக்கு நான் சாப்பிட்டுட்டே போறேன் என்றான்.

உடனே தேவகி மற்றவர்களையும் பார்த்து நீங்களும் வாங்க எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம் எப்படியும் சாப்பிட நேரம் ஆயிடுச்சு என்று அழைக்க ..

சரி என்ற தலை ஆட்டிவிட்டு செண்பகத்தின் வீல்சேரை தள்ளிக் கொண்டு டைனிங் டேபிளுக்கு செல்ல ரசிகா மட்டும் வராமல் ஹாலிலேயே அமர்ந்திருந்தால் .

டைனிங் டேபிள் வந்த ரோஜா அப்போது தான் ரசிகாவை கவனித்தாள் அங்கு இருந்தவளை பார்த்து இன்னும் ஏண்டி அங்கேயே உட்கார்ந்திருக்க வா வந்து சாப்பிடு என்று ரோஜா அழைக்க ..

இல்ல ரோஜா எனக்கு பசிக்கல நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நான் ரூமுக்கு போறேன் என்றாள் .

தேவகியும் கொஞ்சமா சாப்பிட்டுவிட்டு போய் தூங்கு ரசிகா சாப்பிடாம படுத்த நைட்டு தூக்கமே வராது என்றார் .

எனக்கு பசிக்கல நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நான் தூங்குறேன் அத்தை என்று விட்டு தன்னரைக்கு வேகமாக எழுந்து சென்று விட்டால் ரசிகா .



தான் கீழே வருவதற்கு முன்பு வரை ரசிகா அனைவரிடமும் சிரித்து பேசிக் கொண்டு இருக்க தன்னை பார்த்ததும் அவள் முகம் மாறியதையும் சாப்பாடு வேண்டாம் என்று விட்டு உள்ளே செல்வதையும் கவனித்த அர்ஜுனுக்கு அவள் வேண்டுமென்றே தன்னை உதாசீனப்படுத்துகிறாள் என்று தோன்ற ஆரம்பித்தது .



எழுந்து செல்லும் ரசிகாவையே முறைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் அர்ஜுன் .



செண்பகத்தை அவர் அறையில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்த ரோஜா ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த தேவகி பாலு இருவரின் அருகிலும் வந்து அவர்களோடு அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தால்



அயன் ரூமுக்குச் சென்று நீண்ட நேரம் ஆகியிருக்க உணவையும் அவன் ரூம்மிலேயே சாப்பிட்டு முடித்திருக்க ரோஜா இன்னமும் அவனை பார்க்க மேலே செல்லாமல் இங்கே அமர்ந்திருப்பதை பார்த்த தேவகி ரோஜாவிடம் ஏமா இன்னும் இங்கேயே உட்கார்ந்திருக்க போ போய் படுத்து தூங்கு நேரம் ஆச்சு பாரு என்று அவளை ரூமுக்கு செல்ல சொன்னார் .



இல்லத்தை எனக்கு தூக்கம் வரல கொஞ்ச நேரம் உங்க கூட டிவி பாத்துட்டு அதுக்கப்புறம் தூங்க போறேன் என்றாள் .



சரிம்மா என்ற தேவகி எப்படி ரோஜாவை அவள் அறைக்கு அனுப்புவது என்று தெரியாமல் அமர்ந்திருக்க ... அவர்கள் வீட்டு வேலை ஆள் அயன் அறைக்கு கையில் பால் டம்பளருடன் செல்வதை பார்த்தவர் அந்த வேலையாலே கூப்பிட்டு எங்க போற சாமி என்றார் அம்மா ஐயாவுக்கு பால் கொண்டு போறேன் என்றார் அந்த வேலையால் .



இனிமேல் நீ இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டாம் அதான் என் பிள்ளை கவனிச்சுக்க என் மருமகள் வந்துட்டாலே இனி அது எல்லாம் அவ பாத்துக்குவார் என்றவர் அம்மாடி ரோஜா அந்த பாலை வாங்கிட்டு போய் அயனுக்கு கொடுத்துடுமா சூடாக இருந்தால் தான் அவன் குடிப்பான் என்று வேலை ஆளிடம் இருந்து டம்ளரை வாங்கி ரோஜாவின் கையில் கொடுத்தார் தேவகி .



அவரிடம் பாலை வாங்கிவிட்டு மெதுவாக படி ஏறி மேலே சென்றாள் ரோஜா . இந்த கிழவி வேற என்கிட்ட இவன் கிட்ட என்ன இப்படி கோர்த்து விட்டுடுச்சு நானே இவன்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க நேரம் கடத்திக்கிட்டு இருந்தா இப்படி என்ன வம்புல மாட்டி விட்டுடுச்சு இப்போ உள்ள போனா இவன் என்னை என்ன பண்ணுவான் என்று தெரியலையே என்று பயந்தபடி தங்கள் அறைக் கதவை மெதுவாக திறந்து கொண்டு ரோஜா உள்ளே சென்றாள் .



❤️

ஹலோ ஃபிரண்ட்ஸ் ❤️

Facebook group link
Whatspp channel link

 ஸ்டோரி படிச்சிட்டு மறக்காம ரேட்டிங் குடுங்க பிரண்ட்ஸ் அதேபோல கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க 🙏😍

 அதிருதடா நெஞ்சம் உன்னாலே இது ஒரு ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட். அதீத ரொமான்ஸும்  காதல் காட்சிகளும் நிறைந்த கதை. காட்சிகளின் தேவைக்கேற்ப ரொமான்ஸ்கள் விரவிக் கிடக்கும். காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும் வார்த்தைகளும் வீரியமும் அதிகரித்திருக்கும்.

 இந்த மாதிரியான கதையைப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லுங்கள்.



உங்கள் லயா 💕

❤️








கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Episode -13 என்கிட்டே வந்து வசமா மாட்டிக்கிட்ட...

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹 குரல் வந்த திசையை நோக்கி  திரும்பிப் பார்த்த ஆத்விக் அழகு சிலை ஒன்று பட்டுடுத்தி தன் கண் முன் வந்து கொண்டு இருந்தவளை பார்த்து ஸ்தம்பித்து போய் விட்டான்   ஆத்விக்கை விட அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது ஷ்யாம் தான். ஏனென்றால் அவனுக்கு அன்வியை பற்றி நன்றாகவே தெரியும். அவள் பல பிசினஸ்கள் செய்து அதில் அனைத்திலுமே கொடி கட்டிப் பறக்கும் நம்பர் ஒன் பிசினஸ் உமென் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.  அன்வியைப் பார்த்த ஆர்வத்தில் ஆதவிக்கிடம் "டேய் ஆத்விக் உனக்கு ஜாக்பாட் தாண்டா அடிச்சிருக்கு " என்றான். "என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியலையே" என்று கேட்டான் ஆத்விக் .   "டேய் நீ கல்யாணம் பண்ணிக்க போறது சாதாரணமான பெண் கிடையாது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் பிசினஸ் வுமன் இவங்க தான். இவங்க கால் பதிக்காத தொழிலே இல்லைன்னு தான் சொல்லணும் என்னம்மா அம்மாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோமே அதுகூட இவங்களோடது தான்" என்றவன்.  "மிஸ்ஸிங் அம்வியைப் பற்றி நீ கேள்விப்பட்டதே இல்லையா? அவங்கள இதுக்கு முன்னாடி நீ பார்த்ததே இல்லையா?" என்றான் ஆ...

Episode -6 வாடி!! என் பொண்டாட்டி!!!

ஹலோ ஃபிரெண்ட்ஸ் ❤️ பால் செம்புடன் அயன் அறைக்குள்  நுழைந்த ரோஜாவின் கையில் இருந்த செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவளை இழுத்து அணைத்தவன்.  இங்க இருக்க என்னோட ரூமுக்குள்ள வரதுக்கு  இவ்வளவு நேரமா என்று சொல்லி அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் பாய்ந்தான் அயன்.  இதை சற்றும் எதிர்பாராத ரோஜா தன்மையில் விழுந்தவனை கஷ்டப்பட்டு தள்ளி விட்டவள் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து  நின்று டேய் மச்சி என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற என்றவள்.  இவ்வளவு நாள் என் கூட பேசாம இருந்ததற்காக என்ன பழி வாங்க  என்கிட்டே இப்படி நடந்துகிட்டு பிராங்க் பண்றியா என்றாள்.  அவள் மீது பாய்ந்திருந்த அயன் தன்னை தடுத்துவிட்டால் என்ற கோபத்தோடு கட்டிலில் இருந்து இருந்து அமர்ந்தவன் ரோஜாவை பார்த்து ரோஸ்மில்க் யாராவது பிராங்க் பண்ண இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குவாங்களா சத்தியமா இது பிராங்க் இல்லடி... உண்மையாவே எனக்கு நீ வேணும் வா என்று எட்டி தன் அருகில் நின்றிருந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .  இதை சற...

Episode-31 பார்க்கத்தான் டெரர் பீஸ்

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹 வசீகரனின் வித்தைக்காரி #ஆத்விக் #அன்வி #காதல் #darkromance #love #வயது_வந்தோருக்கான_கதை #உணர்ச்சிகளின்_கடிவாளமற்ற_கதை  ❤‍🔥 கதைக்கு ஏற்பு காதல் காட்சிகளும், கூடல்களும், ரொமான்ஸும் விரவிக்கிடக்கும் . 🔥🔞 நிறைந்து வார்த்தைகள் அதற்கு தகுந்தார் போல வரலாம் படிக்கும் முன் எச்சரிக்கிறேன். உணர்வுகளை கட்டிப் படுத்த கூடியவர்கள் படிக்கலாம் எனது கதையை பிடிக்காதவர்கள் கடந்து செல்லலாம்  அன்வியிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கவரை கொண்டு வந்து சிறுவன் கீர்த்தியிடம் கொடுத்துவிட்டு சென்றான். அதில் என்ன இருக்கிறது என்று அன்வி பிரித்துப் பார்க்கப் போக அதற்குள் தேன்மொழி ரிசப்ஷனுக்கு இவர்களை பார்ப்பதற்காக வந்தவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள் சீக்கிரம் வாருங்கள் என்று இதுவரையும் அவசரபடுத்தினார். அந்தக் கவரை கீர்த்தி அன்வியின் ஹேண்ட் பேக்கில் வைத்து "பிறகு படித்துக் கொள் முதலில் ஸ்டேஜ்க்கு போலாம வா...." என்று அன்வியை அழைத்துக் கொண்டு சென்றாள். மேடை ஏறிய அன்வியை ஆத்விக்குடன் சேர்ந்து வந்திருந்த விருந்தினர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர். அப்போது வா...