முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Episode-31 பார்க்கத்தான் டெரர் பீஸ்



ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹

வசீகரனின் வித்தைக்காரி
#ஆத்விக் #அன்வி #காதல் #darkromance #love #வயது_வந்தோருக்கான_கதை #உணர்ச்சிகளின்_கடிவாளமற்ற_கதை 

❤‍🔥 கதைக்கு ஏற்பு காதல் காட்சிகளும், கூடல்களும், ரொமான்ஸும் விரவிக்கிடக்கும் .

🔥🔞 நிறைந்து வார்த்தைகள் அதற்கு தகுந்தார் போல வரலாம் படிக்கும் முன் எச்சரிக்கிறேன். உணர்வுகளை கட்டிப் படுத்த கூடியவர்கள் படிக்கலாம் எனது கதையை

பிடிக்காதவர்கள் கடந்து செல்லலாம் 

அன்வியிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கவரை கொண்டு வந்து சிறுவன் கீர்த்தியிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
அதில் என்ன இருக்கிறது என்று அன்வி பிரித்துப் பார்க்கப் போக அதற்குள் தேன்மொழி ரிசப்ஷனுக்கு இவர்களை பார்ப்பதற்காக வந்தவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள் சீக்கிரம் வாருங்கள் என்று இதுவரையும் அவசரபடுத்தினார்.

அந்தக் கவரை கீர்த்தி அன்வியின் ஹேண்ட் பேக்கில் வைத்து "பிறகு படித்துக் கொள் முதலில் ஸ்டேஜ்க்கு போலாம வா...." என்று அன்வியை அழைத்துக் கொண்டு சென்றாள்.

மேடை ஏறிய அன்வியை ஆத்விக்குடன் சேர்ந்து வந்திருந்த விருந்தினர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

அப்போது வாசுவும் அவன் அம்மா அப்பாவும் மேடைக்கு வர அவர்களை பார்த்ததும் அன்வியை புருவம் சுருக்கினாள்.

"என்னமா அப்படி பாக்குறே இவங்களை நாம ரிசப்ஸ்னுக்கு கூப்பிடவே இல்லையே இருந்தும் ஏன் வந்திருக்காங்கனு பாக்குற அப்படி தானே.... உன் அப்பாவும் நானும் நெருங்கிய நண்பர்கள் அப்படி இருக்கும் போது அவனுடைய பொண்ணு ரிசப்ஷனுக்கு நான் வராமல் போயிடுவேனா!!" என்று சொன்னார் வாசுவின் அப்பா ஏகாம்பரம்.

"நீங்க வேணா என் அப்பாவை உங்களோட ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கலாம். ஆனா என் அப்பா கண்டிப்பா உங்க கூட நண்பனா பழகினதுக்கு வருத்தப்பட்டு இருப்பார்.
என் அம்மா அப்பாவோட சாவுக்கு யாரு காரணம்னு எனக்கு இவ்வளவு நாள் தெரியாம போயிடுச்சு. ஆனா இப்பதான் சிலர் மேல எனக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சிருக்கு அந்த சந்தேகம் மட்டும் உறுதி ஆயிடுச்சுன்னா என் அம்மா அப்பாவை என்கிட்ட இருந்து பிரிச்சவங்கள நான் சும்மாவே விட மாட்டேன்.
அதன் பிறகு அவங்க வாழ்க்கையில் சந்தோஷங்குற பேச்சுக்கே இடம் இருக்காது" என்று ஏகாம்பரத்திடம் கோபமாக கொண்டே பேசினால் அன்வியை .

அன்வியின் கையைப் பிடித்து அழுத்திய ஆத்விக் வாசுவை பார்த்து "இவன உனக்கு ஏற்கனவே தெரியுமா?" என்று கேட்டான்.

"ஏன் தெரியாம என்னோட பிசினஸ் எதிரி இவரு வாசுவோட அப்பா எங்க அப்பாவுடைய நண்பர்னு பொய் வேஷம் போட்டு அவர் கூட பழகுனவரை, இவங்க ரெண்டு பேருமே ஒரு வகையில எங்க உறவினர்கள் தான். அது மட்டும் இல்லாம கீர்த்தியை கடத்த சொல்லி நம்ம ஃபர்ஸ்ட் நைட் நிறுத்துனதுக்கு காரணமும் இவன் தான் என்று" அவன் காதில் மெதுவாக சொன்னால்.

"ஆமா அவன் பேரு கரெக்டா சொல்லி கேக்குறியே உனக்கு இவனை முன்னமே தெரியுமா?" என்றாள் அன்வியை.

"இவன ரொம்ப பெருசா எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா ஒரு பார்ட்டில வச்சு ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான். அப்போ இவன்கிட்ட இருந்து அந்த பொண்ண காப்பாத்த போறப்போ தான் இவனை எனக்கு தெரியும்" என்றான் ஆத்விக்.

"அப்பாவை போலத்தான் பிள்ளையும் இருப்பார்" என்று ஏகாம்பரத்தை பார்த்துவிட்டு சொன்னால் அன்வியை .

"என்ன சொன்ன!!" என்று கோபமாக அன்வியின் அருகில் வந்த ஏகாம்பரத்தின் மார்பில் கை வைத்து தடுத்த ஆத்விக்.

"சார் வாங்க போட்டோ எடுக்கலாம்.
உங்களுக்கு பின்னாடி நிறைய பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க தேவையில்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்" என்று ஆத்விக் சொல்லி அவரை பிடித்து தன்னருகில் நிறுத்தி வைத்தான்.

போட்டோ எடுத்துவிட்டு அவர்கள் ஸ்டேஜ்ல இருந்து இறங்கி சென்றுவிட....

ஒவ்வொருவராக வந்து இருவருக்கும் வாழ்த்து சொல்லி விட்டு ரிசப்ஷன் முடிந்து கிளம்பிச் சென்றனர்.

ரிசப்ஷன் ஹாலில் அன்வியின் குடும்பமும் ஆத்விக் குடும்பமும் மட்டுமே இருந்தனர்.

அன்வியும் ஆத்விக்கும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க.... இப்போது அங்கு வந்த ஆத்விக்கின் சித்தப்பா தண்டபாணி தன் மனைவி தனாவுடன் வந்தார்.

ஆத்விக்கிடம் வந்தவர் " எப்படியோ இத்தனை வருஷம் நீ கஷ்டப்பட்டதுக்கு பெரிய இடத்துல இருக்கு பொண்ணா பாத்து எப்படியோ கல்யாணம் பண்ணி வளைச்சு போட்டுட்ட ... அப்படியே உன் பொண்டாட்டியோட வசதிய வைத்து உன் தம்பிக்கு எங்கேயாவது ஒரு நல்ல இடத்துல ஒரு வேலை பார்த்து கொடுக்கலாம் இல்லையா" என்று கேட்டார் தண்டபாணி.

"எங்க போனாலும் சரியா வேலையே செய்ய மாட்டேங்குறான் அவன் மேனேஜர் சரி இல்ல வேலை பாக்குற இடம் சரியில்லைன்னு சொல்லிட்டு வந்துடறான். உன் பொண்டாட்டிக்கு தான் இவ்வளவு பணம் வசதியோ இருக்கே பொண்டாட்டிகிட்ட சொல்லி என் பையனுக்கு ஒருவேளை ஏற்பாடு பண்ணி தர சொல்லலாம் இல்ல" என்று தண்டபாணி சிறிதும் தயக்கம் இல்லாமல் கேட்டார்.

அவரை ஆத்விக் தர்ம சங்கடத்துடன் பார்த்தவன் "எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க ரிசப்ஷனுக்கு தானே வந்தீங்க. சாப்டீங்களா முதல்ல போய் சாப்பிடுங்க" என்று அவரை ஆத்விக் அங்கு இருந்து அனுப்ப பார்க்க....

அப்போது அவர் மனைவி தனா "ஏங்க இப்ப எதுக்குங்க ஆத்விக்கிட்ட போய் நீங்க அவன் பொண்டாட்டிகிட்ட கேட்க சொல்றீங்க.....
அவன் பொண்டாட்டி அவன் பக்கத்துல தான் உக்காந்து இருக்கா.... அவகிட்ட நேரடியா கேட்க வேண்டியதுதானே" என்று சொன்னவர் அன்வியிடம் திரும்பி.

"ஏம்மா நீ தான் நிறைய கம்பெனி அது இதுன்னு வச்சிருக்கியாமே நாங்க கேள்விப்பட்டோம் எப்படியோ எங்க ஆத்விக் உன்னை எப்படி வளைச்சு போட்டு கல்யாணம் பண்ணி இருக்கான்னு தெரியலை. எங்க ஆத்விக்குக்குன்னு இருக்குற ஒரே சொந்த நாங்க மட்டும்தான் என் பையனுக்கு உன் கம்பெனில ஏதாவது வேலை இருந்தாள் போட்டு தரலாம் இல்ல" என்று தன நேரடியாக அன்வியிடம் கேட்க.....

இவர்கள் இருவரும் பேசுவதை கவனித்து கொண்டே சாப்பிட்டுக் இருந்த அன்வியை இப்போது தன்னிடமும் அவரது மனைவி பேசுவதை கேட்டவள்.

அமைதியாக அவரை பார்த்து "சரி நாளைக்கு உங்க பையன அவரோட பயோடேட்டாவை எடுத்துட்டு என் கம்பெனிக்கு வர சொல்லுங்க. அவனுக்கு தகுந்த மாதிரி ஏதாவது வேலை இருந்தா பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

"ஏங்க..பாத்தீங்களா நான் தான் சொன்னேனே ஆத்விக்கிட்ட கேட்டா அவன் எப்படியும் நம்ம பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். அதனால் தான் நேரடியா நானே அந்த பொண்ணு கிட்ட கேட்டேன்" என்று தன் கணவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தாவர் அன்வியிடம் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

.
 அவர்கள் சென்றதும் ஆத்விக் திரும்பி அன்வியிடம் "சாரி அன்வி நான் இவங்கள கூப்பிட்டு இருக்கவே கூடாது என் அம்மா தான் என் அப்பாவோட சொந்தம் என்று நமக்கு இருக்கிறது அவரோட தம்பி மட்டும் தான் அதனால அவங்கள கூப்பிட்டு ஆகணும்னு வற்புறுத்தினால தான் நான் என் சித்தப்பாவோட குடும்பத்தை கூப்பிட வேண்டியதுதான் போயிடுச்சு அவங்க வந்தும் இப்படி எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணிட்டாங்க என்னை மன்னித்துவிடு" என்றான் மீண்டும் அன்வியிடம் ஆத்விக்.

"இதுக்காக ஏன் நீ என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்க அவங்களோட குணம் அப்படிங்கறதுக்காக நீ என்ன பண்ண முடியும் சரி விடு நாளைக்கு அவங்க பையன் ஆபிசுக்கு வந்தா பாத்துக்கலாம் நீ சாப்பிடு" என்று அவர்களைப் பற்றி எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தால்.

அன்வியுடன் குடும்பமாக நின்று போட்டோ எடுத்து முடித்த பிறகு சூர்யா விஷேசத்திற்கு வந்திருந்தவர்களை கவனிக்க அவன் அம்மா அப்பாவுடன் சென்று விட....

 அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இப்போதுதான் அவனும் சாப்பிட வந்தான்.
சாப்பிட வந்தவன் அன்வியும் ஆத்விக்கும் சாப்பிட்டு கொண்டு இருக்க அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்களிடம் சென்றவன்.

"என்ன மிஸ்டர் ஆத்விக் ரொம்ப சீரியஸாவே இருக்கீங்க நானும் வந்து பார்க்கிறேன் எங்க அன்வியை கூட கொஞ்சம் கூட சிரிச்சு பேசுற மாதிரியே தெரியலையே" என்று கேட்டான் சூர்யா.

"நான் சீரியஸா இருக்கிறப்போ மட்டும் தான் நீங்க வரீங்க என் அன்வியை கிட்ட நான் சிரிச்சு பேசுறப்போ நீங்க எங்க ரெண்டு பேரையும் பாக்கல " என்று என் அன்வியை என்னும் வார்த்தையை மட்டும் அழுத்தி சொல்லி ஆத்விக் சூர்யாவை பார்த்தான்.


"ஓகே...ஓகே... கூல் சகலை நான் உங்களை வம்பு இழுக்கத்தான் வந்ததிலிருந்து என் அன்வியை ... என் ஆளுன்னு... சொல்லி கிண்டல் செய்தேன். மற்றபடி வேற எதுவும் இல்ல நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகலை. எப்படியோ இவகிட்ட இருந்து நான் தப்பிச்சிட்டேன்% என்று சொல்லி சூர்யா அன்வியை பார்த்து கிண்டலாக சிரித்தான்.

அவனை தன் இடது கையால் அடித்த அன்வி " உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு டா... நீ என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம் ஆனா உன் பின்னாடியே ஒருத்தி சுத்திட்டு இருக்காளே அவகிட்ட இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது" என்று அன்வி யமுனாவை நினைத்து கூறினாள்.

"என் பின்னாடி யார் சுத்திட்டு இருக்காங்க?" என்று எதுவும் தெரியாமல் சூர்யா கேட்டான்.

"அங்கு திரும்பி பாரு சூர்யா" என்று அவன் பின்னால் கை காட்டினாள் அன்வி .

அவள் சொன்னதும் திரும்பிப் பார்த்த சூர்யா அங்கு அவன் பின்னே சிரித்து முகமாக நின்று கொண்டிருந்தால் யமுனா.

யமுனாவை பார்த்ததும் அவ்வளவு நேரம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த சூர்யாவின் முகம் மாறிவிட...

"நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க நான் போய் சாப்பிடுறேன் எனக்கு ரொம்ப பசிக்குது அம்மா அப்பா எனக்காக வெயிட்டிங்" என்று சொல்லிவிட்டு சூர்யா யமுனாவை கண்டுகொள்ளாமல் அவளைத் தாண்டி சாப்பிட சென்றான்.

❤️

ரிசப்ஷனில் தன்னை பற்றி ஆத்விக் அன்வியிடம் சொன்னதை கேட்டு கடுப்பான வாசு அங்கிருந்து தன் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பியவன்.

வாசு சென்று கொண்டிருக்கும்போதே அவர்களிடம் "ஏப்பா நம்ம சொந்தக்காரங்க என்னை ஹாஸ்பிடல்ல பார்க்க வந்தப்ப.
நம்ம அவங்க கிட்ட இந்த ரிசப்ஷன்ல வந்து வாசன் ஸ்டேட்டஸ்க்கு சமமா இருக்கிற நம்ம குடும்பத்துக்குள்ள கல்யாணம் பண்ணாம அந்த மிடில் கிளாஸ் ஆளு ஆத்விக்கை ஏன் கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு கேட்க சொன்னோமே.... ஆனா இன்னைக்கு ரிசப்ஷனுக்கு வந்து இருந்தவங்க யாருமே எதுவுமே பேசாமல் இருந்துட்டாங்க ஏன்?" என்று புரியாமல் கேட்டான் .

"அதை ஏம்பா கேக்குற நானும் பேசி எல்லாரையும் மனசு மாற்றி விடாமல் இதே மாதிரி பேச சொல்லித்தான் சொல்லி இருந்தேன். ஆனால் ரிசப்ஷனுக்கு வந்தவங்க எல்லாருக்குமே பெரிய பெரிய பைகளில் பரிசுகளும் பணமும் கொடுத்து வாசன் அவர்கள் எல்லோரோட வாயையும் அடைச்சிட்டாரு" என்றார் ஏகம்பாரம்.

"என்னப்பா சொல்றீங்க?" என்றான் வாசு நம்பமுடியாமல்.

"ஆமாப்பா நம்ம சொந்தக்காரங்கள பத்தி தான் உனக்கு நல்லாவே தெரியுமே பணம் என்றதும் வாயை பிளந்துருவானுங்க இவங்க கிட்ட நம்ம அப்பவே பணமோ பரிசோ ஏதோ ஒன்னு கொடுத்து இந்த ரிசப்ஷன்ல பிரச்சனை உண்டு பண்ணி சொல்லி இருக்கணும் ஆனா இவங்க பேசுறது எல்லாம் வெச்சுட்டு நான் தான் கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்"

" அன்வி கல்யாணத்துக்கு வந்திருந்த எல்லாருக்குமே லட்சக்கணக்கில் பணமும் நகையும் பரிசும் கொடுத்து எல்லார் வாயையும் அடைச்சிட்டாரு. ரிசப்ஷன் முடிச்சு கிளம்பின ஒவ்வொருத்தர் முகத்தையும் நீ பார்த்து இருக்கணுமே" என்றார் கடுப்பாக.

"இப்ப என்னப்பா பண்றது இவனுங்க எல்லாம் இப்படி இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று தன் சொந்தங்களை வாசு வறுத்தெடுக்க...

"கவலைப்படாதப்பா நம்ம என்ன தான் ரிசப்ஷன்ல பிரச்சனை உண்டு பண்ணினாலும் அது ஒன்னும் பெருசா அன்விக்கும் ஆத்விக்கிற்கும் இடையில நடந்த கல்யாணத்தை பாதிச்சிருக்காது.
ஆனால் அதைவிட ஒரு பெரிய விஷயத்தை நான் இன்னைக்கு செஞ்சிட்டு வந்து இருக்கேன். இன்னைக்கு நைட்டு கண்டிப்பா ஆத்விக்கிற்கும் அன்விக்கும் இடையில ஒரு பெரிய பூதாகரமான விஷயம் நடக்கப் போகுது" என்றார் வஞ்சகமாக சிரித்துக்கொண்டே ஏகாம்பரம்.

அவர் அப்படி சொன்னதும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த "விஜயா என்னங்க சொல்றீங்க?" என்று ஆர்வத்தில் சீட்டிலிருந்து முன்னே வந்து ஏகாம்பரத்தை பார்த்து கேட்டார்.

"ஆமா விஜயா ஒரு பையன்கிட்ட நான் ஒரு கவர கொடுத்து அன்வி கொடுக்க சொல்லி அனுப்பினேன்னே நீ கவனிச்சியா?" என்று கேட்டார்.

"ஆமாங்க நான் பாத்துட்டு தான் இருந்தேன் என்ன அந்த கவர்ல அப்படி என்னங்க இருந்துச்சு நானும் கேட்கலாம் என்று நினைத்தேன்" என்றார் விஜயா.

"அந்தக் கவர்ல தான் அன்விக்கு ஆத்விக்கிற்கும் இடையில நடக்கப்போற பிரச்சினை அடங்கி இருக்கு" என்றார்.

உடனே வாசு "அப்படி என்னப்பா அந்த கவர்ல இருந்துச்சு அப்படி என்ன அவங்க ரெண்டு பேருக்கு இடையில பிரச்சனை வர அளவுக்கு விஷயம் இருக்கு" என்றான்.

" கொஞ்சம் பொறுப்பா அதெல்லாம் நான் மெதுவா சொல்றேன் அவசரப்பட வேண்டாம்" என்றார் ஏகம்பரம்.

❤️

மண்டபத்தில் இருந்து கிளம்பி அனைவரும் வீட்டிற்கு வந்து விட... இரவு அன்விக்கும் ஆத்விக்கிற்கும் முதலிரவிற்க் காண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.

கீழே இருந்த அறையில் அன்வியை கனகாவும் நிலாவும் தயார் செய்து கொண்டு இருந்தனர்.

 மேலே தங்கள் அறையில் தயாராக இருந்தான் ஆத்விக் அவனுடன் ஷ்யாமும் சூர்யாவும் இருந்தனர்.

"என்ன சகல ஏசி அறையிலும் முகமெல்லாம் இப்படி வியர்த்து இருக்கு. ஃபர்ஸ்ட் நைட் நெனச்சு ரொம்ப பயமா இருக்கு என்று கிண்டல் செய்தான் சூர்யா.
ஆமா சூர்யா அன்வியை பற்றி தான் உனக்கு தெரியுமே.... அவளை எப்படி சமாளிக்க போறேன்னு தான் எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு" என்றான் ஆத்விக்.

அவன் சொன்னதை கேட்டு பலமாக சிரித்த சூர்யா " என்ன சகல அவள பாத்து பயப்படுறீங்க..... அவ வெளியே பார்க்கறதுக்கு மட்டும் தான் அப்படியே டெரரா இருப்பா ஆனா குடும்பம் அன்பு பாசம்னு வரப்போ அப்படியே ஆப்போசிட்.
நமக்காக அவ என்ன வேணா செய்வா உங்களுக்கு இன்னும் அவளை முழுசா தெரியல சந்தோசமா உங்களோட வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணுங்க எல்லாமே நல்லதா நடக்கும். இப்படி எல்லாம் பதட்டப்பட்டு இருக்க கூடாது" என்று சூர்யா ஆத்விக்கை சகஜமாக்கும்படி பேசினான்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட ஷ்யாம் " ஆமாம் மிஸ்டர் சூர்யா அன்வி மேடம் பார்த்தாலே முதல்ல எனக்கும் கொஞ்சம் அப்படி பயமா தான் இருந்துச்சு ஆனா என்கிட்ட அவங்க நல்லபடியா பேசி பழகுறப்ப தான் என்னால அவங்களோட உண்மையான கேரக்டரை புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு " என்றான். 

" ஆமா அன்வி எப்பவுமே அப்படித்தான் அப்புறம் நீங்க என்ன இந்த மிஸ்டர் சூரியான்னு சொல்லி கூப்பிட வேண்டாம் ஆத்விக் எப்படி உங்களுக்கு பிரெண்ட் அதே மாதிரி தான் என்னையும் உங்க பரெண்டுன்னு நினைச்சுக்கோங்க இனிமேல் என்னோட பெயர் சொல்லியே கூப்பிடுங்க" என்று சூர்யா ஷ்யாமின் தோளில் கையை போட்ட படி கூறினான்.

.
"அப்ப நீங்களும் என்ன வாங்க போங்கன்னு கூப்பிட வேண்டாம். என் பேரு ஷ்யாம் என் பேரை சொல்லியே கூப்பிடுங்க" என்று ஷ்யாமும் சொல்ல... அவர்கள் இருவரும் இப்போது சற்று சகஜமாக பேச ஆரம்பித்தனர்.

இப்பொழுது அவர்கள் அரை கதவு தட்டப்பட சூர்யா சென்று யார் என்று பார்க்க அறைக்கு வெளியே யமுனா நின்றிருந்தாள்.

அவளை பார்த்ததும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்ட சூர்யா "என்ன" என்றான் கடுப்பாக.


"என்ன மாமா நான் எவ்வளவு சந்தோஷமா சிரிச்சிட்டு உங்களை பார்க்கிறேன். நீங்க இப்படி முகத்தை உம்முனு வச்சிருக்கீங்களே" என்று அவன் இடுப்பை கில்லி "கொஞ்சம் முகத்தை நல்லா வச்சுக்கோங்க மாமா" என்றாள் யமுனா.

" உன்கிட்ட முகத்தை நன்றாக வைத்து பேச எனக்கு எந்த அவசியமில்லை இப்ப எதுக்கு வந்து கதவை தட்டின அத முதல்ல சொல்லு" என்றவன் என்னை தொட்டு பேசுற வேலையை வெச்சுக்கதே" என்றான் கடுப்பாக.

 "இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை " என்று அவனை முறைந்தவள்.

"உங்களை தாத்தா கீழ வர சொன்னாரு அதை சொல்லத்தான் வந்தேன் பேசுறதுக்கு ரொம்ப சலிச்சுக்கிறீங்க ம்ஹும்..." என்று தன் உதட்டை சுழித்தாள் .

"தாத்தா என்ன வர சொன்னாரா!எதுக்கு?" என்று அவன் கேட்க.

" அதை போயி தாத்தாகிட்டயே கேளுங்க நீங்கதான் என்கிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டீங்களே.... அப்புறம் என்ன" என்று சொன்னவள்.

"நான் கீழ போறேன் " என்று சொல்லி அங்கிருந்து செல்லப் போனவள் திரும்பி சூர்யாவை யமுனா பார்த்தாள்.

"ஏன் இன்னும் போகாம இங்கேயே நின்னுட்டு இருக்க" என்றான் சூர்யா.

"அதுவா...அதுவா.... இதுக்கு தான் நின்னுட்டு இருந்தேன் மாமா" என்று சொல்லி மறுபடியும் சூர்யாவின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி வைத்துவிட்டு கொஞ்சம் சிரிங்க சிடுமூஞ்சி ஆஃபீஸ்ர் என்று அங்கிருந்து கீழே ஓடி விட்டாள்.

தன் இடுப்பில் கிள்ளிவிட்டு ஓடியவளை பார்த்து கடுப்பில் முறைத்த சூர்யா "இவளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல இவளுக்கு ஒரு நாளைக்கு இருக்கு" என்று தன் இடுப்பை தேய்த்து விட்டுக் கொண்டே சூரியா உள்ளே வர அவனைப் பார்த்து ஷ்யாமும் ஆத்விக்கும் சிரித்து கொண்டிருந்தனர்.
      
யமுனாவும் சூர்யாவும் பேசியது இவர்கள் இருவரும் கேட்டு சிரிப்பதை பார்த்த சூர்யா "என்ன சிரிப்பு" என்று அவர்கள் அருகில் வர...

"நான் உன்னை பார்த்ததுல இருந்து நீ முகத்தை எப்பவுமே சீரியஸா தான் வச்சிருக்கே சூர்யா. யமுனா உன்ன பார்த்து சிடுமூஞ்சி ஆஃபீஸ்ர்ன்னு சொல்லிட்டு போனதில்ல தப்பே இல்லை" என்று ஆத்விக் சொல்லி சிரிக்க.

ஷ்யாமும் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.
அவர்கள் இருவரையும் முறைத்த சூர்யா "ரொம்ப கிண்டல் பண்றீங்க என்ன" என்று சீரியஸாக சொல்ல....

"பாரு இப்பவும் அதே மாதிரி சீரியஸா தான் பேசுற" என்று ஷ்யாம் சொல்லி கிண்டல் செய்யவும்.

 பல்லை கடித்து தரையை உதைத்த சூரியா "உங்க ரெண்டு பேரையும் நான் வந்து பேசிக்கிறேன். தாத்தா என்ன கூப்பிட்டாராம் நான் என்னன்னு கேட்டுட்டு வரேன். ஷ்யாம் ஆத்விக் கூட இரு" என்று சொல்லிவிட்டு சூர்யா கீழே சென்றான்.

 சூர்யா அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே செல்லவும் அவன் எதிரில் கையில் பால் செம்புடன் அன்வி வரவும் சரியாக இருந்தது.

 தலை குனிந்தவரே செல்வி. சொல்லிக்கொடுத்தது போல கையில் பால் செம்புடன் படியேறி வந்த அன்வியை பார்த்து தன் வாயைப் பொற்றி சிரித்தான் சூர்யா.

 "இதெல்லாம் சத்தியமா உனக்கு செட்டே ஆகல...". என்று அன்வியை கிண்டல் செய்ய.

 சூர்யா தன்னைக் கிண்டல் செய்யவும் "உன் வேலைய பாத்துட்டு போடா" என்ற சூர்யாவை முறைத்து விட்டு படியேறி தன்னறைக்கு சென்றாள் .

பால் செம்புடன் தன்னறைக் கதவை திறந்த அன்வி உள்ளே செல்லப்போக.... 

ஷ்யாமும் ஆத்விக்கும் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்ததை கேட்டதும் அப்படியே நின்று விட்டாள்.

ஹலோ மக்களே 🌹

விக்ரம், மீனு ரீரன் ஸ்டோரி மக்களே. இந்த ஸ்டோரி டெய்லி updates வேணும்னு நினைக்குறவங்க 
என்னோட facebook group join பண்ணிக்கோங்க.

அதில் join பண்றவங்களுக்கு மட்டும் தான் என்னோட வாட்ஸாப்ப் channel group link தருவேன். என்னுடைய அனைத்து ஸ்டோரி லிங்க்கும்  வாட்ஸாப்ப் சேனலில் வரும் மக்களே. 🙏

facebook குரூப்பில் வாட்ஸாப்ப் சேனல் குரூப் லிங்கை பின் செய்து உள்ளேன் அதில் join செய்து கொள்ளலாம்

 Facebook group link 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Episode -13 என்கிட்டே வந்து வசமா மாட்டிக்கிட்ட...

ஹலோ பிரெண்ட்ஸ் 🌹 குரல் வந்த திசையை நோக்கி  திரும்பிப் பார்த்த ஆத்விக் அழகு சிலை ஒன்று பட்டுடுத்தி தன் கண் முன் வந்து கொண்டு இருந்தவளை பார்த்து ஸ்தம்பித்து போய் விட்டான்   ஆத்விக்கை விட அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது ஷ்யாம் தான். ஏனென்றால் அவனுக்கு அன்வியை பற்றி நன்றாகவே தெரியும். அவள் பல பிசினஸ்கள் செய்து அதில் அனைத்திலுமே கொடி கட்டிப் பறக்கும் நம்பர் ஒன் பிசினஸ் உமென் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.  அன்வியைப் பார்த்த ஆர்வத்தில் ஆதவிக்கிடம் "டேய் ஆத்விக் உனக்கு ஜாக்பாட் தாண்டா அடிச்சிருக்கு " என்றான். "என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியலையே" என்று கேட்டான் ஆத்விக் .   "டேய் நீ கல்யாணம் பண்ணிக்க போறது சாதாரணமான பெண் கிடையாது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் பிசினஸ் வுமன் இவங்க தான். இவங்க கால் பதிக்காத தொழிலே இல்லைன்னு தான் சொல்லணும் என்னம்மா அம்மாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோமே அதுகூட இவங்களோடது தான்" என்றவன்.  "மிஸ்ஸிங் அம்வியைப் பற்றி நீ கேள்விப்பட்டதே இல்லையா? அவங்கள இதுக்கு முன்னாடி நீ பார்த்ததே இல்லையா?" என்றான் ஆ...

Episode -6 வாடி!! என் பொண்டாட்டி!!!

ஹலோ ஃபிரெண்ட்ஸ் ❤️ பால் செம்புடன் அயன் அறைக்குள்  நுழைந்த ரோஜாவின் கையில் இருந்த செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவளை இழுத்து அணைத்தவன்.  இங்க இருக்க என்னோட ரூமுக்குள்ள வரதுக்கு  இவ்வளவு நேரமா என்று சொல்லி அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் பாய்ந்தான் அயன்.  இதை சற்றும் எதிர்பாராத ரோஜா தன்மையில் விழுந்தவனை கஷ்டப்பட்டு தள்ளி விட்டவள் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து  நின்று டேய் மச்சி என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற என்றவள்.  இவ்வளவு நாள் என் கூட பேசாம இருந்ததற்காக என்ன பழி வாங்க  என்கிட்டே இப்படி நடந்துகிட்டு பிராங்க் பண்றியா என்றாள்.  அவள் மீது பாய்ந்திருந்த அயன் தன்னை தடுத்துவிட்டால் என்ற கோபத்தோடு கட்டிலில் இருந்து இருந்து அமர்ந்தவன் ரோஜாவை பார்த்து ரோஸ்மில்க் யாராவது பிராங்க் பண்ண இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குவாங்களா சத்தியமா இது பிராங்க் இல்லடி... உண்மையாவே எனக்கு நீ வேணும் வா என்று எட்டி தன் அருகில் நின்றிருந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .  இதை சற...