முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Episode -13 என்கிட்டே வந்து வசமா மாட்டிக்கிட்ட...


ஹலோ பிரெண்ட்ஸ் 🌹

குரல் வந்த திசையை நோக்கி  திரும்பிப் பார்த்த ஆத்விக் அழகு சிலை ஒன்று பட்டுடுத்தி தன் கண் முன் வந்து கொண்டு இருந்தவளை பார்த்து ஸ்தம்பித்து போய் விட்டான் 

 ஆத்விக்கை விட அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது ஷ்யாம் தான். ஏனென்றால் அவனுக்கு அன்வியை பற்றி நன்றாகவே தெரியும். அவள் பல பிசினஸ்கள் செய்து அதில் அனைத்திலுமே கொடி கட்டிப் பறக்கும் நம்பர் ஒன் பிசினஸ் உமென் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

 அன்வியைப் பார்த்த ஆர்வத்தில் ஆதவிக்கிடம் "டேய் ஆத்விக் உனக்கு ஜாக்பாட் தாண்டா அடிச்சிருக்கு " என்றான்.

"என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரியலையே" என்று கேட்டான் ஆத்விக் .

  "டேய் நீ கல்யாணம் பண்ணிக்க போறது சாதாரணமான பெண் கிடையாது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் பிசினஸ் வுமன் இவங்க தான். இவங்க கால் பதிக்காத தொழிலே இல்லைன்னு தான் சொல்லணும் என்னம்மா அம்மாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோமே அதுகூட இவங்களோடது தான்" என்றவன்.

 "மிஸ்ஸிங் அம்வியைப் பற்றி நீ கேள்விப்பட்டதே இல்லையா? அவங்கள இதுக்கு முன்னாடி நீ பார்த்ததே இல்லையா?" என்றான் ஆர்வமாக.

 "இதுக்கு முன்ன பாத்திருக்கேன்" என்று தன் மனதிற்குள் ஹோட்டலில் முதன்முறையாக அன்பியை சந்தித்து தருணத்தை நினைத்துக் கொண்டான்.

 "அப்போ இவங்கள பத்தி உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கணுமே" என்றான் சியாம் 

இல்லை என்பது போல ஆத்விக் தலையை ஆட்ட...

 "நீ எல்லாம் என்னடா அப்டேட்ல இருக்க... இவங்க பெயரைச் சொன்னாலே ஆண்கள் மத்தியில மட்டும் இல்ல பெண்கள் மத்தியிலும் ரொம்ப பெரிய இம்ப்ரசன் அண்ட் ஒரு க்ரேஸ் இவங்க மேல இருக்கு. இது உனக்கு தெரியாதா என்னடா நீ..."என்று சலித்துக் கொண்டான் ஷியாம் 


அவர்கள் இருவரும் தன்னைப் பார்த்து தான் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே வந்த அன்வி.

தனக்கு தான் திருமணமாகப் போகிறது  என்று நினைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் கம்பீரமாக வேக எட்டுக்களோடு நடந்து வந்தவள். தன் தாத்தாவின் அருகில் வந்து நின்று ஆத்விக்கை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் அவன் கண்களை நேராக பார்க்க...

அவள் தன்னை பார்த்த பார்வையிலேயே ஆத்விக்கிற்கு ஏதோ போல ஆகிவிட்டது. அவள் கண்களை நேராக சந்திக்க முடியாமல் முதலில் தடுமாறியவன் பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை போலவே அவனும் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான்.

இவனை தவிர தன்னை இவ்வளவு தைரியமாக யாராலும் நேருக்கு நேர் தன் கண்களை பார்க்க முடியாது என்று நினைத்தவள். அவனை பார்த்து லேசாக ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு திரும்பிக் கொண்டாள்.

அவள் வேறு பக்கம் திரும்பியதும் தான் ஆதவிக்கிற்கு மூச்சே வந்தது.... இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த ஷ்யாமிற்கு தன் கண்களை தன்னால் நம்பவே முடியவில்லை....

"டேய் ஆத்விக் என்ன டா உன் வருங்கால பொண்டாட்டி... ச்சே.. ச்சே... அது என்ன வருங்காலம் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் உன்னோட பொண்டாட்டி ஆக போறாங்க" என்று சொன்னவன்.

"அன்வி உன்னை அப்படி பாக்குராங்க.... நீயும் சலைக்காமள் அவங்களை நேருக்கு நேரா பாத்துட்டு இருக்கே....உன் பொண்டாட்டியை நேரா பார்க்குறதுக்கு எவ்வளவு பேர் பயத்துக்குவாங்கனு உனக்கு தெரியுமா? அப்படி இருக்க... நீ கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காம இவ்ளோ தைரியமா பார்க்கிறே "என்றான் ஷ்யாம்.

"டேய்... எனக்கும் அவ கண்ணை பார்க்குற அப்போ உளுக்குள்ள கொஞ்சம் உதறல் எடுக்க தான் செய்யுது....ஆனா நான் மத்தவங்க மாதிரி அவகிட்டே ஒன்னும் வேலை பாக்கலையே.. நான் ஏன் அவளை பார்த்து பயப்படணும். அதனால தான் நானும் அவளை நேருக்கு நேரா பார்த்தேன்.
ஆனா ஒன்னு டா.... திமிரா நெஞ்சை நிமிர்த்தி அவளை பார்த்தாலும் உள்ளுக்குள்ள... கொஞ்சம் உதறல் எடுக்க தான் டா செய்யுது இன்னமும். நம்ம வீக்னெஸ் மட்டும் அவங்களுக்கு தெரியாத மாதிரி இருந்துக்கணும் இல்லையின்னா " என்றவன் அன்வியை பார்த்தான்.

அவள் தன்  பியே உடன் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள்.

ஆத்விக் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த வாசன் பரவாயில்லையே "என் பேரன் என் பேத்தியை பார்த்ததுமே ஒரு அளவுக்கு புரிஞ்சுக்கிட்டான் போல" என்று நினைத்தவர்.

"சரி... சரி... நேரம் ஆகுது  நேரம் ஆகுது சீக்கிரம் ரெண்டு பெரும் கையெழுத்து போடுங்க... நாம கோவில்ல நம்ம முறைப்படி வேற கல்யாணம் நடத்தணும்" என்று சொன்னவர் ஆத்விக், அன்வி இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து இருவரையும் திருமணப்பதிவில் சைன் செய்ய சொன்னார்.

பேனாவை கையில் வாங்கிய அன்வி ஆத்விக்கை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு கை எழுத்து போட்டவள். அவன் கையில் பேனாவை கொடுத்து "உனக்கு இந்த வாய்ப்பை விட்டா திரும்பவும் கிடைக்காது. நல்லா யோசிச்சு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம்னா மட்டும் கையெழுத்து போடு" என்றவள்.

"ஏன்னா நீ கையெழுத்து போட்டுட்டு நமக்கு திருமணம்னு ஒன்னு நடந்துட்டா என் வாழ்க்கைக்குள் வந்த உன்னை எந்த காரணத்திற்காகவும் திருப்பி அனுப்பும் எண்ணம் என்பதே எனக்கு கிடையாது. அது நீயே விரும்பினாலும்  கனவிலும் நடக்காத ஒன்று. அப்படி என் வாழ்க்கையை விட்டு போய்த்தான் ஆகனும்னு நீ நினைச்சா அடுத்த நொடி என் வாழ்க்கையை விட்டும்.... உன் உடலை விட்டும்சென்று விடுவீர்கள்,இந்த உலகத்தை விட்டும் நீ போக வேண்டி இருக்கும். அது கூட என் விருப்பப்படி தான் நடக்கும்" என்று ஆதவிக்கை எச்சரிப்பது போல பார்த்தாள் அன்வி .

அவள் பேசியதை கேட்டவன் அதிர்ச்சியாக பார்த்தவன் பின் பேனாவை வாங்கிக்கொண்டு.... " ஒரு முறை முடிவு எடுத்த பிறகு என் வாழ்க்கையில் அதை மாற்றிக் கொள்ளும் பழக்கமே எனக்கு கிடையாது. ஆனா...." என்று அவளை பார்க்க... "என்ன?" என்பது போல அவளை பார்த்தான்.

"நீ, வா, போன்னு பேசுறது எல்லாம் நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும்போது பேசலாமே.. நம்ம தனியா இருக்க அந்த நேரத்துல நீ என்னை டா... போட்டு கூட கூப்பிடலாம். நானும் அப்படித்தான். இங்க எல்லாரும் இருக்காங்க இல்லையா அதனால நீ என் பேர் சொல்லி கூப்பிடலாமே" என்றான்.

"ம்ம்ம்... உனக்கு கண்டிப்பா என்னோட பேரு என்னன்னு ஞாபகம் இருக்கும் என நம்முடன் முதல் சந்திப்பை அப்படி இருந்தது " என்றான் 

அவன் மனதில் நினைத்தை தைரியமாக பேசுவதை பார்த்த அன்வி அவனை பார்த்து மெல்ல சிரித்தவள் " அதை எப்படி நான் மறப்பேன்" என்று சொல்லி சிரித்தவள் ஹலோ ஆத்விக் ஐ அம் அன்வி "என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டால்.

அவளை பார்த்து தன் கையில் இருந்த பேனாவை கீழே வைத்தவன் அவள் கையைப் பிடித்து குலுக்கி மெல்ல சிரித்தான் . பின் பேனாவை எடுத்து அவள் பெயர் அருகில் தன் கையெழுத்தை போட்டுவிட்டு சட்டப்படி அன்வியை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

 இவர்கள் இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்த வாசனம் மற்றவர்களும் சிரித்தபடி இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க வாசனோ தன் மனதிற்குள் "சரியான ஜோடிப் பொருத்தம் தான் இருவரும் " என்று நினைத்துக் கொண்டனர்.

சம்பிரதாயப் படி திருமணம் செய்ய.... இருவரையும் ஒரே காரில் தன்னுடன் கோவிலுக்கு அழைத்து செல்ல....

ஷ்யாமும் மற்றவர்களும் வேறு ஒரு காரில் அவர்களுடன் சென்றனர். கோவில் வரும் வரை இருவரும் பேசிக கொள்ளாமல் வருவதை கவனித்துக் கொண்டு தான் வந்தார் வாசன்.

கோவில் வந்ததும் ஆத்விக்கை அன்வியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவர் . அவரிடம் நீண்ட நாள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் முருகனிடன் "எல்லாம் ரெடியா? " என்றார்.

"எல்லாம் தயாராக இருக்குங்க ஐயா...என்று சொல்லி அவர்களை உள்ளே அழைத்து செல்ல...மிகவும் சிம்பிள் ஆக தான் திருமணம் என்று சொன்னாலும் இங்கே வந்து பார்த்த ஆதவிக் அவர்கள் திருமணத்திற்கு செய்திருக்கும் ஏற்பாட்டை பார்த்துவிட்டு மலைத்து தான் போய்விட்டான்.

வண்ண வண்ண பூக்களால் மணமேடை அமைத்து... அதில் பூ தோரணங்கள் சுற்றிலும் அமைத்து அதில் அழகாக ஒரு ஆண் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது போல பூக்களாலேயே அழகாக வடிவமைத்து இருந்தனர்.

இருவரையும் அழைத்து சென்று மணமேடையில் அமர வைத்தவர் ஆத்விக்கை விட்டு சற்று தள்ளி அமர்ந்து இருந்த அன்வியிடம் குனிந்து "கொஞ்சம்  சிரிச்ச மாதிரி முகத்தை  வெச்சுட்டு ஆத்விக் பக்கத்துல போய் உக்காரு" என்றார்.

அவரை நிமிர்ந்து முறைத்து விட்டு திரும்பிக் கொள்ள...." ம்ஹும்.... நீ இந்த கல்யாணத்தை தவிர வேற எந்த விசயத்துக்காக என் பேச்சை கேட்டு இருக்கே" என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து கொண்டார்.

அவர்கள் இருவரும் மணமேடையில் அமர்ந்து இருக்க... அவர்களுக்கு எதிரே நின்று போட்டோ எடுத்துக்கொண்டு இருந்த போட்டோக்ராபர் இருவரையும் அருகில் அமர சொல்ல பயந்து கொண்டு இருந்தார்.

"அக்கா... என்ன மாமாவை விட்டு இவ்ளோ தள்ளி உக்கார்ந்து இருக்கே.... கொஞ்சம் பக்கத்தில் போய் உக்காரு" என்று யமுனா ஆத்விக்கை பார்த்து சிரித்துக் கொண்டே கூறினாள்.

அவளை முறைத்த அன்வி ஆத்விக் அருகில் போகாமல் அப்படியே இருக்க "உன் அக்கா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரிஜிஸ்டர் ஆபீஸ் வச்சு நீயே நினைச்சாலும் என்கிட்ட இருந்து போக விட மாட்டேன்னு சொன்னாங்க. ஆனா இப்ப என்னடான்னா உன் அக்கா என் பக்கத்துல உக்காரதுக்கு இவ்வளவு யோசிக்கிறாங்க " என்றான் நக்கலாக.

 "உன் அக்கா வெறும் வாய் பேச்சு தானா? ரூல்ஸ் எல்லாம் எனக்கு மட்டும் தானா? அவங்களுக்கு கிடையாதா?" என்று அவள் ஈகோவை தூண்டி விட்டான் ஆத்விக் 

 
அவனை திரும்பிப் முறைத்தவள் தான் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து ஆத்விக்கை இடிப்பது போல தள்ளி அமர்ந்தவள் "போதுமா.. இல்லை உன் மடி மேல் வந்து உக்கார்ந்துக்கவா?" என்று அவனை முறைக்க...

"உனக்கு ஓகேன்னா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உன்னை காலம் முழுக்க சுமக்க போகிறேன். சிறிது நேரம் என் மடியில் தாங்க மாட்டேனா...என் மடியில் அமர வைத்து உனக்கு தாலி கட்டவும் நான் ரெடி" என்றான் அருள்.

அதை கேட்டவள் " பரவாயில்லையே நல்லாவே பேசுற நீ" என்றவள் திரும்பிக் கொண்டாள் .

இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் பேசிக்கொள்வதை பார்த்த வாசனுக்கு இருவரும் சீக்கிரமே அன்யோன்யாமாக பழகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஐயர் மந்திரங்கள் ஓத... வாத்தியங்கள் முழங்க.. அன்வியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டினான் ஆத்விக் . அவள் கழுத்தில் தாலி கட்டிவிட்டு பின் அவள் நெற்றி அவள் பொட்டு வைத்தவன். அவள் காதோரம் "என்கிட்டே இப்படி வந்து மாட்டிக்கிட்டியே.."என்றவன் எதுவும் தெரியாமல் திரும்பி அமர்ந்து கொண்டான்

அவன் சொன்னதை கேட்டு அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் அன்வி.

" என்னை சைட் அடிச்சது போதும் கொஞ்சம் திரும்பி போட்டோவிற்கு போஸ் கொடு" திரும்பி சிரித்த முகமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தான்.

அன்வி அதிர்ச்சி மாறாமல் திரும்பி போட்டோவிற்கு போஸ் கொடுத்தாள்.
இவர்கள் இருவரின் இந்த அழகான தருணத்தை போட்டோக்ராபர் போட்டோக்களாக எடுத்து தள்ளினார்.

❤️

ஹலோ பிரெண்ட்ஸ்🌹

ஸ்டோரி படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுஙக பா..

உங்கள் லயா 💕

❤️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Episode -6 வாடி!! என் பொண்டாட்டி!!!

ஹலோ ஃபிரெண்ட்ஸ் ❤️ பால் செம்புடன் அயன் அறைக்குள்  நுழைந்த ரோஜாவின் கையில் இருந்த செம்பை வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் அவளை இழுத்து அணைத்தவன்.  இங்க இருக்க என்னோட ரூமுக்குள்ள வரதுக்கு  இவ்வளவு நேரமா என்று சொல்லி அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் பாய்ந்தான் அயன்.  இதை சற்றும் எதிர்பாராத ரோஜா தன்மையில் விழுந்தவனை கஷ்டப்பட்டு தள்ளி விட்டவள் வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து  நின்று டேய் மச்சி என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற என்றவள்.  இவ்வளவு நாள் என் கூட பேசாம இருந்ததற்காக என்ன பழி வாங்க  என்கிட்டே இப்படி நடந்துகிட்டு பிராங்க் பண்றியா என்றாள்.  அவள் மீது பாய்ந்திருந்த அயன் தன்னை தடுத்துவிட்டால் என்ற கோபத்தோடு கட்டிலில் இருந்து இருந்து அமர்ந்தவன் ரோஜாவை பார்த்து ரோஸ்மில்க் யாராவது பிராங்க் பண்ண இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குவாங்களா சத்தியமா இது பிராங்க் இல்லடி... உண்மையாவே எனக்கு நீ வேணும் வா என்று எட்டி தன் அருகில் நின்றிருந்தவர்களின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் .  இதை சற...

Episode-31 பார்க்கத்தான் டெரர் பீஸ்

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹 வசீகரனின் வித்தைக்காரி #ஆத்விக் #அன்வி #காதல் #darkromance #love #வயது_வந்தோருக்கான_கதை #உணர்ச்சிகளின்_கடிவாளமற்ற_கதை  ❤‍🔥 கதைக்கு ஏற்பு காதல் காட்சிகளும், கூடல்களும், ரொமான்ஸும் விரவிக்கிடக்கும் . 🔥🔞 நிறைந்து வார்த்தைகள் அதற்கு தகுந்தார் போல வரலாம் படிக்கும் முன் எச்சரிக்கிறேன். உணர்வுகளை கட்டிப் படுத்த கூடியவர்கள் படிக்கலாம் எனது கதையை பிடிக்காதவர்கள் கடந்து செல்லலாம்  அன்வியிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கவரை கொண்டு வந்து சிறுவன் கீர்த்தியிடம் கொடுத்துவிட்டு சென்றான். அதில் என்ன இருக்கிறது என்று அன்வி பிரித்துப் பார்க்கப் போக அதற்குள் தேன்மொழி ரிசப்ஷனுக்கு இவர்களை பார்ப்பதற்காக வந்தவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள் சீக்கிரம் வாருங்கள் என்று இதுவரையும் அவசரபடுத்தினார். அந்தக் கவரை கீர்த்தி அன்வியின் ஹேண்ட் பேக்கில் வைத்து "பிறகு படித்துக் கொள் முதலில் ஸ்டேஜ்க்கு போலாம வா...." என்று அன்வியை அழைத்துக் கொண்டு சென்றாள். மேடை ஏறிய அன்வியை ஆத்விக்குடன் சேர்ந்து வந்திருந்த விருந்தினர்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தனர். அப்போது வா...