முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நியூ ஸ்டோரி அப்டேட்

முகம் தெரியாதவனுடன் ஓர் இரவு   🔥 மிகவும் சாதாரணமாக அதன் போக்கில் வாழ்ந்து கொண்டு இருந்த என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி போட்டது அந்த ஓர் இரவு . "இது எல்லாம் நான் நேற்று பார்ட்டிக்கு போனதால் வந்த வினை . என் தோழி ஒருத்தி அவள் காதல் கை கூடிவிட்டதுன்னு சொல்லி எனக்கு ட்ரீட் கொடுக்க என்னையும் சில தோழிகளையும் அழைத்துக்கொண்டு அந்த பப்பிற்கு சென்றால்.அங்கே அன்றைய ட்ரீட் முழுவதும் அவளுடைய செலவு . அப்போ சொல்ல வேணுமா என்ன ? கணக்கில்லாமல் ட்ரிங்கஸ் குடித்தோம் அனைவருமே. நான் பீர் அதிகம் குடித்ததனால் வயிறு முட்டிக்கொண்டு வந்துவிட்டது. தோழியிடம் சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று வெளியே வந்தேன்".         நடக்க முடியாமல் நான் தடுமாறி கீழே விழும்வேளையில் ஒருவன் வந்து என்னை இடையில் காய் கொடுத்து பிடித்துக்கொண்டான். அவனிடம் இருந்து விலகி நான் அவனை யார் என்று பார்த்தேன் . போதையில் அவன் மகம் எனக்கு சரியாக நினைவில் இல்லை . ஆனால் அவன் உடல் அமைப்பை வைத்து அவன் மிகவும் அழகாகி தான் இருந்திருக்க வேண்டும் . அதுவரை தான் எனக்கு நினைவில் இருக்கிறது .     "ம்ஹு..." ப...
சமீபத்திய இடுகைகள்

Episode -64 கை தேர்ந்த திருடன்

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹 அமுதா சொன்னதே கேட்டு அதிர்ந்த ஆதவிக்கும் அன்வியும் அவரை பார்க்க...  ஏன் ரெண்டு பேரும் என்னை அப்படி பாக்கறீங்க நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் மனசுக்குள்ள போட்டு வச்சு எல்லாத்தையும் மறைச்சு வச்சுக்குவீங்களா எங்களால அது முடியாதா? என்று அமுதா அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டார்.  அப்போது வாசன் அமுதாவின் அருகில்  வந்து அவர் தோளில் கை வைத்து அழுத்தம் கொடுத்து அவரை சமாதானப்படுத்த முயன்றவர் ஆத்விக்கிடம் திரும்பி இந்த விஷயம் எல்லாம் எனக்கு  நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சம்மதம் சொல்றதுக்கு முன்னாடியே தெரியும் என்றார் வாசன் .  அவர் சொன்னதை கேட்டு அன்வியை விட அதிர்ச்சியானது ஆத்விக் தான் .  தாத்தா என்று தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து அதிர்ச்சியாக ஆத்விக் எழுந்திருக்க...  அவன் கையைப் பிடித்துக் கொண்ட வாசன் ஆமா ஆத்விக் நீ ரெஸ்டாரண்டில் வந்து அன்வியை முதல் முறை பார்த்துட்டு போன பிறகு அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குன்னு அவ பார்வையை வச்சு நான் கண்டுபிடிச்சிட்டேன். அதுவும் இல்லாம நீ என்கிட்ட நடந்துக்கிட்டதையும் வைத்து எனக்கும் உன்னை ரொம்ப...

episode -14 உங்களை கடிச்சு தின்னுற மாட்டேன்

ஹலோ பிரெண்ட்ஸ் அர்ஜுனுக்கு மனதிற்குள் ஒரு புயலே அடித்துக்கொண்டு இருந்தது . இரவு முழுவதும் ரசிகா தன்னை புறக்கணிப்பதை எண்ணி அவன் தூங்கவே இல்லை . காலை வழக்கம் போல 4 மணிக்கு எழுந்துவன் உடற்பயிற்சி செய்வதற்காக அயனுக்கும், அர்ஜூனுக்கும் அவர்கள் வீட்டிலேயே கட்டமைக்கப்பட்டு இருந்த நவீன உபகரணங்களுடன் கூடிய ஜிம்மிற்குள் நுழைந்தான் அர்ஜுன். ரசிகாவின் மேல் அவனுக்கு சொல்ல முடியாத கோபம் உண்டானது தன்னை சதுரமாக கூட அவள் பார்க்காமல் இப்படி புறக்கணிப்பதை எண்ணி அவன் மனம் புழுங்கி கொண்டு இருந்தது . அந்த நினைப்போடே தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான் . ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உடற்பயிற்சி செய்ததின் விளைவாக அவன் அணிந்து இருந்த கை இல்லாத பனியனும் ஷார்ட்ஸும் ஈரம் ஆகி இருக்க...பனியனை கழட்டி அருகில் இருந்த சேரில் வைத்துவிட்டு டவலை எடுத்து உடலை துடைத்துக்கொண்டே ஜிம்மில் இருந்த பால்கனிக்கு இயற்கை காற்றில் சிறிது நேரம் நிற்கலாம் என்று அங்கு வந்து நின்றான். அப்போது அவன் வீட்டு வாசலில் இருந்து அந்த நேரத்தில் ஒரு பெண் பேசும் சத்தம் வந்தது . அடஙக குரலை கேட்டது போல இருக்க...யார் என்று அந்த மங்கல...

Episode -63 உண்மை வெளிப்பட்டது

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹 அன்வி நீ ஒன்றும் சின்ன பொண்ணு கிடையாது. இந்த மாதிரி எல்லாம் என்னை பிளாக்மெயில் பண்ணினா நான் எதுக்கும் இறங்கி வர மாட்டேன் நான் என்னோட முடியலை உறுதியா இருக்கேன் தயவு செய்து புரிந்துகொள்.  என்னோட குடும்பம் உன் குடும்பத்துக்கு செய்த துரோகத்தை கேட்டால் நீயே என்னையும் என் குடும்பத்தையும் அடிச்சு வெளியே துரத்திடுவ...  நன்றாக உறவு இருக்கும் போதே மரியாதை நாங்கள் வெளியே செல்வதுதான் சரி என்று சொன்ன அருள் அமுதாவை கைத்தவர்களாக மெத்தையில் இருந்து பிடித்து நிற்க வைத்தவன். அருகில் இருந்த சக்கர நாற்காலியில் அவரை அமர வைத்துவிட்டு நிலாவை பார்த்து போலாம் என்று சொல்ல... அங்கு யாருக்கும் என்ன சொல்வது என்று புரியவே இல்லை.  அன்வி கையில் கத்தி வைத்துக் கொண்டு ஆத்விக்கை மிரட்ட... அவளிடம் நிதர்சனத்தை உரைத்த ஆத்விக் இந்த மாதிரியெல்லாம் சின்ன பிள்ளைத்தனமா பண்ணாத என்று சொல்லிவிட்டு அவரைத் தாண்டி தன் அம்மாவையும் தங்கையும் அழைத்துக் கொண்டு  செல்லப் போக...  அவன் முன்னால் நின்று இருந்தவர்கள் எல்லாம் ஆத்விக்கைப் போக வேண்டாம் என்று தடுக்க முயற்சித்தனர்.  அப்போது...

Episode -62 எனக்கு டிவோர்ஸ் வேணும்.

ஹலோ ஃபிரெண்ட்ஸ் 🌹  மறுநாள் காலை   சூரியன் தன் ஒளி கற்றைகளை   வீசிக்கொண்டு வெளியே வந்தது.  ஒவ்வொருவராக இறங்கி கீழே வர....  ஹாலில்   ஆத்விக் அமர்ந்து இருந்தான். வந்தவர்கள் எல்லாம் ஆத்விக்கிடம்  வந்து என்ன ஆத்விக்  சீக்கிரமாக எழுந்து வந்துட்ட ஹாஸ்பிடல் போய் வந்தியா, இல்ல தூங்கி இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டியா என்று கேட்டனர்.  தூக்கம் வரல அதனால்தான் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கேன் என்றான் ஆத்விக் .  முதலில் வந்த அமுதாவும் வாசனும்    இதை கேட்டவர்கள் பின்பு அவனோடு சேர்ந்து ஹாலிலேயே தங்களுக்கும் காபி கொண்டு வரச் சொல்லி அவனோடு பேசிக்கொண்டு காபி குடிக்க ஆரம்பித்தனர்.  தேன்மொழி, முருகவேளும் இவர்களோடு சேர்ந்து காபி குடிக்க சிறிது நேரத்தில் சூர்யாவும் வந்து விட்டான்.  வந்ததும் நேராக ஆத்விக்கின்  அருகில் சென்று அமர்ந்து அப்புறம் சகல என்ன இவ்வளவு சீக்கிரமாக எழுந்து வந்துட்டீங்க. என் மாமன் பொண்ணு உங்களை அவ்வளவு சீக்கிரம் வெளியே விட்டுட்டாளா என்று நக்களாகக் கேட்டேன் சூர்யா.  ஆத்விக் அதற்கு  பெரிதாக ...

Episode -13 என் ரோஸ் இருக்க இந்த மில்க் எதுக்கு...

பால் டம்பளருடன் தங்கள் அறைக்கு தயங்கி கொண்டே வந்து ரோஜா உள்ளே பார்க்க... அப்போதுதான் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்த்து வெளியே வந்தான் அயன் . அவன் சட்டை இல்லாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு வந்ததை பார்த்ததும் ஐயோ..கடவுளே...என்று கத்தியவள் அவனை பார்க்காமல் திரும்பி நின்றுகொண்டாள். ஹே ரோஸ் மில்க் என்ன டி திரும்பிட்டே...என்றவாறே அவளை நோக்கி வந்தான் அயன் . டேய்..டேய்...அங்கேயே நில்லு என் பக்கத்துல வராத  டிரஸ் போட்டுட்டு வா..இப்படி அறையும் குறையுமா வந்து நீக்காத என்றால் அயனை திரும்பியும் பார்க்காமல் . ஏன் நான் இப்படி இருந்தா நீ என்னை பார்க்க மாட்டியா என்ன என்றான் அயன் . உன்னை நான் ஏன் டா இப்படி பாக்கணும் என்று மனதில் நினைத்துக்கொண்டவள் .முதல்ல போய் டிரஸ் போட்டுட்டு வர போறியா இல்லியா...என்றால் அவன் பக்கம் லேசாக திரும்பி பார்த்து . அதென்னன நீ சொன்னால் நான் செய்யணுமா என்ன நான் இப்படியே தன இருப்பேன் என்ன டி பண்ணுவ ரோஸ் மில்க் ...பாக்குறேன் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்க போறேன்னு என்றவன் . அவள் பின்னால் நின்று இருந்தவன் வேண்டும் என்றே ரோஜாவின் முன் வந்து அவள் தன்னை பார்க்குமா...

Episode -12 உள்ள போனா என்னை என்ன பண்ணுவானோ

ஹலோ பிரெண்ட்ஸ முகில் ரோஜாவின் வீட்டிற்கே வந்து தன்னை ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் அயனை திருமணம் செய்து கொண்டாள் . அயன் ரோஜா கழுத்தில் கட்டாய தாலி கட்டி கூட்டி வந்துவிட்டானோ என்று அவளிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டான் . ரோஜாவின் இடையில் கைகொடுத்து அழுத்தம் கொடுத்த அயன் சொல்லு ரோஜா அதான் நியாயம் கேட்டு வந்து இருக்காரே மிஸ்டர் முகில் அவருக்கு பதில் சொல்லு...என்று அவளையே குறு குறுவென பார்த்துகொண்டு  இடையை அழுத்தினான் . இதை அவர்கள் எதிரே  சோபாவில் அமர்ந்து இருந்த முகில் கவனித்தான் . ஆனால் ரசிகாவிற்கோ ,செண்பகத்திற்கோ அயன் செய்யும் லீலை தெரியவில்லை . அப்போது தான் தோட்டத்தில் இருந்து வந்த தேவகியும் உள்ளே வந்தவர் இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து ரோஜா என்ன சொல்ல போகிறாள். இந்த முகிலை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் அப்போதைக்கு அயனை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொன்னாளா இல்லை உண்மையாகவே ரோஜாவிற்கு பிடித்து தான் தன் மகனை திருமணம் செய்துகொண்டாளா என்று அவரும் ரோஜா சொல்ல போகும் பதிலுக்கு காத்திருந்தனர் . அனைவரும் ரோஜாவையே பார்க்க அவளுக்கு அது ஒரு மாதிரியாக போய்வி...